இன்று இரவு 9 மணிக்கு மோடியுடனான 'மேன் Vs வைல்ட்' நிகழ்ச்சி!

'மேன் Vs வைல்ட்' நிகழ்ச்சி ஆங்கிலம், பெங்காலி, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் 12 டிஸ்கவரி சேனல்களில் திரையிடப்படவுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இன்று இரவு 9 மணிக்கு மோடியுடனான 'மேன் Vs வைல்ட்' நிகழ்ச்சி!

பிரதமர் நரேந்திர மோடியுடன் பியர் கிரில்ஸ் மேற்கொண்டுள்ள சாகச நிகழ்ச்சியான 'மேன் Vs வைல்ட்'-ன் சிறப்பு அத்தியாயம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 12) இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படவுள்ளது.

ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்ட இந்த சிறப்பு அத்தியாயம் உலகெங்கிலும் 180 நாடுகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சி ஒரு வெளிப்படையான மற்றும் சுதந்திரமான பயணமாக இருக்கும், இது வனவிலங்கு பாதுகாப்புக்கு வெளிச்சம் கொடுக்கும், மேலும் சுற்றுச்சூழல் மாற்றம் அது தொடர்பான பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகிறது.

இந்தியாவின் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை வெளிப்படுத்தவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இது ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டதாக பிரதமர் கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் மோடி மற்றும் பியர் கிரில்ஸ் இருவரும் சேர்ந்து ஒரு காட்டு நதியைக் கடக்க ஒரு படகைக் கட்டுவதைக் காணலாம்.

ANI-உடன் பேசிய சாகச பயணி பியர் கிரில்ஸ், ''பிரதமர், ஒரு உலகத் தலைவராக, அனைத்து நெருக்கடியிலும் அமைதியாக இருக்கிறார், அனைத்து முரண்பாடுகளையும் துணிச்சலாக சந்திக்கிறார், அவர் உத்தரகண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா வழியாக தங்கள் பயணத்தைத் தொடங்கும்போது இருந்த ​​சீரற்ற வானிலை உட்பட என்றார். 

மோடியை இந்திய வனப்பகுதிக்குள் ஒரு சாகச பயணத்திற்கு அழைத்துச் செல்வது ஒரு "பாக்கியம்" என்று கிரில்ஸ் குறிப்பிட்டிருந்தார். "இந்த குறிப்பிடத்தக்க உலகத் தலைவருடன் நேரத்தை செலவழித்ததை நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்" என்று அவர் கூறினார்.

இந்தியாவில், பியர் கிரில்ஸ் மற்றும் பிரதமர் மோடியுடன் 'மேன் Vs வைல்ட்' நிகழ்ச்சி ஆங்கிலம், பெங்காலி, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் 12 டிஸ்கவரி சேனல்களில்  திரையிடப்படவுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................