This Article is From Sep 15, 2018

நெல்லை பெட்ரோல் பங்கில் தீப்பிடித்த இரு சக்கர வாகனம்… அதிர்ச்சி வீடியோ!

பெட்ரோல் பங்கில், எரிபொருள் நிரப்பிவிட்டு கிளம்ப தயாராகிறார். அப்போது இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கிறது

நெல்லை பெட்ரோல் பங்கில் தீப்பிடித்த இரு சக்கர வாகனம்… அதிர்ச்சி வீடியோ!

சில தீக்காயங்களுடன் உயிர் தப்பினார் பாதிக்கப்பட்ட நபர்

Tirunelveli:

திருநெல்வேலியில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில், தனது வாகனத்துக்கு எரிபொரு நிரப்பவிட்டு, கிளம்ப இருந்த இரு சக்கர வாகன ஓட்டிக்கும், அவரது பைக்கிற்கும் தீப்பிடித்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பெட்ரோல் பங்கில், எரிபொருள் நிரப்பிவிட்டு அந்த நபர் கிளம்ப தயாராகிறார். அப்போது குபீரென்று இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கிறது. இதனால், அந்த நபர் மீதும் தீ பரவுகிறது. உடனடியாக பைக்கில் இருந்து கீழே இறங்கி ஓடுகிறார் அந்த நபர். அருகிலிருந்தவர்கள் தீயை அணைக்கு முயற்சி செய்கின்றனர். இந்த அனைத்துக் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
 

பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில தீக்காயங்களுடன் அவர் உயிர் தப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனத்தில், ஃபுல் டேங்க் பெட்ரோல் போட்டதால், அது லீக் ஆகி அதன் மூலம் தீப்பிடித்திருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

.