Read in English
This Article is From Aug 09, 2018

முத்தான கல்வி திட்டங்கள் கொண்டு வந்த தலைவர் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி

மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் நல்லுடலுக்கு மாணவ மாணவியர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

Advertisement
Education
New Delhi:

மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் நல்லுடலுக்கு மாணவ மாணவியர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

உடல் நலக் குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதால், ஆகஸ்டு 7 ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு இயற்கை ஏய்தினார். ராஜாஜி அரங்கில் வைக்கப்படிருந்த கருணாநிதியின் உடலுக்கு முக்கிய தேசிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், லட்சக் கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மக்கள் பயன்பாட்டிற்கான பல முக்கியமான திட்டங்கள் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. மிக முக்கியமாக, கல்வி சார்ந்த திட்டங்களால் மாணவர்கள் பெரும் அளவில் பயனடைந்தனர்.

1971 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.கவின் ஆட்சிக் காலத்தில், மாநிலத்தின் முதல் வேளான் பல்கலைக்கழகம் கோவையில் தொடங்கப்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கவும் முக்கிய பணிகளை மேற்கொண்டார்.

Advertisement

மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் வருமான அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச உயர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது.

முக்கியமாக, பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தொழில்முறை படிப்புகளுக்கான சேர்க்கை திட்டம் அமல்படுத்தப்பட்டது. பொறியியல், மருத்துவ படிப்புகள் சேர்க்கைக்கான சிங்கிள் விண்டோ கலந்தாய்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது

Advertisement

அனைத்து அரசு கல்லூரிகளிலும் கணினி பயிற்சித் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்வி உதவியின் மூலம், மாநிலத்தில் உள்ள லட்சக் கணக்கான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியில் நடக்க இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது

Advertisement