சஸ்பெண்டான ஆம் ஆத்மி எம்.பி. பாஜகவுக்கு தாவினார்!!

2014 மக்களவை தொகுதி தேர்தலில் ஹரிந்தர் சிங் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் 2015-ல் அவர் சஸ்பெண்ட் ஆனார்.

சஸ்பெண்டான ஆம் ஆத்மி எம்.பி. பாஜகவுக்கு தாவினார்!!

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் பாஜகவில் ஹரிந்தர் சேர்ந்தார்.

New Delhi:

பஞ்சாப் மாநிலத்தி சேர்ந்த ஆம் ஆத்மி மக்களவை எம்.பி. ஹரிந்தர் சிங் சஸ்பெண் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்திருக்கிறார். 

பஞ்சாப் மாநிலத்தின் பதேகர் சாகிப் மக்களவை தொகுதியின் உறுப்பினராக ஹரிந்தர் சிங் இருந்து வருகிறார். அவர் எஸ்.சி. வகுப்பை சேர்ந்தவர். 2014 மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றிருந்தார்.

அவரை கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய காரணத்தால் கடந்த 2015-ல் ஆம் ஆத்மி கட்சி சஸ்பெண்ட் செய்து வைத்திருந்தது. 

இந்தநிலையில் அவர் பாஜகவுக்கு தாவியுள்ளார். பஞ்சாப் தேர்தலை பொறுத்தவரையில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. 
 

More News