This Article is From May 11, 2019

''மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன்'' - NDTV -க்கு அளித்த பேட்டியில் ராகுல் கருத்து!!

மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி NDTV- க்கு பேட்டி அளித்துள்ளார்.

தேர்தல் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்திருக்கிறார்.

Shujalpur, Madhya Pradesh:

மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தேர்தல் களத்தில் பிஸியாக இருந்த ராகுல், என்.டி.டி.டிவி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் நாட்டின் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ராகுல் பதில் அளித்திருக்கிறார்.

ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது- 

நான் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்கிறேன். அங்கு மக்கள் அச்சத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. நாட்டை ஒரு சக்தி கட்டுப்படுத்த முயல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

1984-ல் நடந்த கலவரம் மிகவும் துயரமானது. அதில் எவர் ஈடுபட்டிருந்தாலும் தண்டனை கண்டிப்பாக கிடைக்க வேண்டும். இதுபற்றி சாம் பித்ரோடா சொன்னது தவறுதான். மாயாவதி ஒரு தேசிய அடையாளமாக இருக்கிறார். அவர் பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்தபோதிலும், நாட்டு மக்களுக்கு நன்கு அறிந்த முகமாக உள்ளார். 

யாருடைய பேச்சையும் கேட்காமல் நாட்டை ஆண்டால் அவர் நல்ல தலைவர் கிடையாது. பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்திற்கு செல்வாரா என்பதுபற்றி இப்போது கூற முடியாது. நான் அனைவரிடம் இருந்தும் பாடம் கற்று வருகிறேன். பிரதமர் மோடியிடம் பாடம் கற்கிறேன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறேன். 

ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் 22 லட்சம் வேலை வாய்ப்பை நாங்கள் உருவாக்கித் தருவோம். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களையும் பாதுகாப்போம். ஆர்.எஸ்.எஸ்.ஐ சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டாலும் கூட அவருக்கு உரிய பாதுகாப்பை அளிப்போம். 

பிரதமர் மோடியின் காலம் முடிந்து விட்டது. இனி அவர் தனிநபரை குறிப்பிட்டு எதுவும் பேச முடியாது. நாட்டில் வெறுப்பை விதைக்கும் கொள்கைக்கு நாங்கள் எதிரானவர்கள். 

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 

.