This Article is From Mar 12, 2019

''மக்களவை தேர்தலில் வெற்றி நிச்சயம்'' - நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது இணைய தள பக்கத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

''மக்களவை தேர்தலில் வெற்றி நிச்சயம்'' - நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

New Delhi:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் ட்விட் செய்துள்ள ராகுல் காந்தி, இந்தப் போரில் (மக்களவை தேர்தலில்) வெற்றி நிச்சயம் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி குறித்து பிரதமர் மோடி இணைய தளத்தில் விமர்சனக் கட்டுரை எழுதியுள்ள நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியிருக்கிறார். 

பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. 

இந்த கூட்டத்திற்கு பின்னர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ''வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தண்டி யாத்திரை நடந்திருக்கும் தினத்தன்று அகமதாபாத்தில்  காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் கொள்கைளான வெறுப்புணர்வு, ஃபாசிஸம், பிரிவினை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை நாம் வெல்ல வேண்டும். இதற்காக எந்த தியாகத்தையும், எந்த முயற்சியையும் நாம் எடுக்கலாம். இந்தப் போரில் நாம் வெற்றி பெறுவோம்'' என்று கூறியுள்ளார். 

முன்னதாக பிரதமர் மோடி இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில்  காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது - 

பல நேரங்களில் மகாத்மா காந்தி பிரிவினை, ஏற்றத் தாழ்வு, சாதி பாகுபாடு ஆகியவற்றை விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த சமூகத்தை பிரிப்பதற்கு ஒரு நாளும் தயங்கியது இல்லை. 

மிக மோசமான சாதிக் கலவரங்கள், தலித்துகளுக்கு எதிரான படுகொலைகள் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்திருக்கின்றன. ஊழல் அர்த்தம் என்று கேட்டால் அதற்கு காங்கிரஸ்தான் என்று இந்த நாடு புரிந்து வைத்துள்ளது. 

இவ்வாறு மோடி தனது கட்டுரையில் கூறியுள்ளார். 

.