This Article is From Feb 07, 2019

ட்விட்டரில் இணைந்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

@sushrimmayawati என்ற பெயரில் மாயாவதியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் செயல்பட்டு வருகிறது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

ட்விட்டரில் இணைந்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ட்விட்டரில் தீவிரமாக செயல்படவுள்ளார் மாயாவதி.

Lucknow:

உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ட்விட்டரில் இணைந்துள்ளார் @sushrimmayawati என்ற பெயரில் மாயாவதியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் செயல்பட்டு வருகிறது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாயாவதி ட்விட்டரில் தீவிரமாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்காக சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டரில் 4.5 கோடிப ஃபாலோயர்ஸ் உள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் ட்விட்டரில் தீவிர செயல்பாட்டில் உள்ளனர்.

இந்த வரிசையில் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியும் இணைந்திருக்கிறார். மாயாவதி பெயரில் கடந்த மாதம் 22-ம்தேதி ட்விட் ஒன்று போடப்பட்டுள்ளது. ஆனால் அப்போது, மாயாதியின் அக்கவுன்ட்தான் என பரவலாக அது அறியப்படவில்லை.

இந்த நிலையில், மாயாவதிக்கு லாலுபிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் வாழ்த்துக் கூறியுள்ளார். இதன்பின்னர், மாயாவதியின் அக்கவுன்ட் பிரபலம் அடைந்து வருகிறது. அகிலேஷ் யாதவுக்கு 70 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் ட்விட்டரில் உள்ளனர்.

தற்போது மாயாவதியும் – அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்திருப்பதால் சமூக வலைதளத்தில் இருவரின் செயல்பாடு தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரின் கட்சிகளும் காங்கிரசை உத்தர பிரதேசத்தில் புறக்கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

.