This Article is From Dec 11, 2018

2032 ஒலிம்பிக்ஸை நடத்த வட மற்றும் தென்கொரியா திட்டம்!

தென் கொரியாவின் துணை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோடேகாங் வடகொரிய துணை விளையாட்டுத்துறை அமைசார் வோன் கில் யூவை சந்திக்கவுள்ளார்

2032 ஒலிம்பிக்ஸை நடத்த வட மற்றும் தென்கொரியா திட்டம்!

வட கொரிய மற்றும் தென் கொரிய விளையாட்டுத்துறை அதிகாரிகள் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 14) அன்று சந்தித்து பேசவுள்ளனர். இந்தச் சந்திப்பு 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான சந்திப்பாகவும், மற்ற சர்வதேச போட்டிகளுக்கான சந்திப்பாகவும் அமையும் என்று கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்குமிடையே உள்ள கேசாங் நகரில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் கொரியாவின் துணை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோடேகாங் வடகொரிய துணை விளையாட்டுத்துறை அமைசார் வோன் கில் யூவை சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பு ஏற்கெனவே நடந்த வட மற்றும் தென் கொரிய தலைவர்களான மூன் மற்றும் கிம் சந்திப்பின் தொடர்ச்சியாக கூறப்படுகிறது என வட கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹப் தெரிவித்துள்ளது.

செப்டம்பரில் நடந்த மூன்றாவது சந்திப்பில் மூன் மற்றும் கிம் 2032ம் ஆண்டு ஒலிம்பிக்கை இணைந்து நடத்த ஒப்புதல் தெரிவித்துள்ளனர். பின் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரிய அணிகளின் பங்கேற்பு குறித்த பேச்சுவார்த்தையும் தொடர்வதாக கூறினர்.

2018ம் ஆண்டு துவக்கத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் ஒருங்கிணைந்த கொடியுடன் இருநாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

.