This Article is From Dec 10, 2018

அடிலெய்ட் டெஸ்ட் - பும்ராஹ், இஷாந்த் அபாரம் வெற்றியை நோக்கி இந்தியா!

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் குவித்திருந்தது

அடிலெய்ட் டெஸ்ட் - பும்ராஹ், இஷாந்த் அபாரம் வெற்றியை நோக்கி இந்தியா!

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் துவங்கியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் குவித்திருந்தது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி 72 ரன்கள் குவித்த ட்ராவிஸ் ஹெட் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடி அரைசதமடித்த ஷான் மார்ஷும் 60 ரன்களில் அவுட் ஆனார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் முறையே இஷாந்த் ஷர்மா மற்றும் பும்ராஹ் கைப்பற்றினர்.

கடைசி நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 137 ரன்களும், இந்தியா வெற்றி பெற இன்னும் 4 விக்கெட்டுகளும் மட்டுமே தேவை. ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் 40 ரன்களுடனும், கம்மின்ஸ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

உணவு இடைவேளைக்கு பின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.