This Article is From Dec 09, 2018

முதலாவது டெஸ்ட் : தடுமாறும் ஆஸி வெற்றியை நோக்கி இந்தியா!

தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலாவது டெஸ்ட் : தடுமாறும் ஆஸி வெற்றியை நோக்கி இந்தியா!

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் என்ற நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. புஜாரா மற்றும் ரஹானே நேர்த்தியான ஷாட்கள் மூலம் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடி வந்த இருவரும் அரை சதமடித்தனர்.

முதல் இன்னிங்ஸில் சதமடித்த புஜாரா 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லயன் பந்தில் பின்ச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த ரோஹித் ஷர்மா 1 ரன்னில் லயன் பந்தில் ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் குவித்துள்ளது. ரஹானே 55 ரன்களுடனும், பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸி தரப்பில் லயன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 275 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று இந்திய அணி தேநீர் இடைவேளை வரை இந்திய அணி பேட் செய்து 400 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் குவித்திருந்த இந்தியா. சற்று அதிரடியாக ஆட ஆரம்பித்தது. இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 16 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் அஷ்வின் 5 ரன்களிலும், ரஹானே 70 ரன்களிலும், ஷமி,இஷாந்த் ரன் எடுக்காமலும் அவுட் ஆக இந்திய அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி 4 விக்கெட்டுகளை 4 ரன்களில் இழந்தது.

தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட்டின் நான்காவது நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 28 ரன்கள் எடுத்துள்ளது. 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட துவங்கிய ஆஸ்திரேலியா முதல் ஓவரிலேயே எல்பிடபிள்யூ முறையில் பின்ச் ரன் எடுக்காமல் அவுட் என அம்பயர் அறிவித்தார். ஆனால் ரிவியூ வில் நோபால் என தெரியவர பின்ச் ஆட்டத்தை தொடர்ந்தார்.

ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அஷ்வின் தேநீர் இடைவேளைக்கு முந்தைய பந்தில் பின்ச்சை 11 ரன்னில் வெளியேற்றினார். ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 295 ரன்கள் தேவை. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது.

தேநீர் இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியாவின் மற்றொரு துவக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் 26 ரன்களுக்கும், கவாஜா 8 ரன்களுக்கும், ஹேண்ட்ஸ்கோம்ப் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஷான் மார்ஷ் 31 ரன்களுடனும், ட்ராவிஸ் ஹெட் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஷ்வின் மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இன்னும் ஒரு நாள் மீதமிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இன்னும் 219 ரன்கள் தேவை. அதேசமயம் இந்தியா மீதமிருக்கும் 6 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினால் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் வெற்றியை சுவைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

.