ஒரு டம்ளர் பாலை தலையில் வைத்து, சிந்தாமல் நீச்சலடித்த ஒலிம்பிக் வீராங்கனை... வைரல் வீடியோ!

டுவிட்டரில் கெட்டியின் நீச்சல் வீடியோ 2.7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது

ஒரு டம்ளர் பாலை தலையில் வைத்து, சிந்தாமல் நீச்சலடித்த ஒலிம்பிக் வீராங்கனை... வைரல் வீடியோ!

கெட்டி தனது தலையில் வைத்த டம்ளரில் இருந்து ஒரு துளி பால் கூட சிந்தவில்லை

ஒரு டம்ளர் பாலை தலையில் வைத்து ஒலிம்பிக் வீராங்கனை ஒருவர் பால் சிந்தாமல் சர்வசாதாரணமாக நீச்சலடித்துச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கேட்டி லெடெக்கி. இவர் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் 15 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். தற்போது இவர் நீச்சல் குளத்தில் பயிற்சியில் இருக்கும் போதும் ஒரு சாதனை புரிந்துள்ளார். 
 

ஒரு டம்ளரில் சாக்லேட் பாலை ஊற்றி, அதை அப்படியே தலைக்கு மேல் வைத்துக் கொண்டார். பின்னர், பால் சிந்தாமல் சிதறாமல் அப்படியே நீச்சலடிக்கத் தொடங்கி விட்டார். தலையை முடிந்த வரையில் நேராக வைத்தவாறே, நீச்சல் குளத்தின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு நீச்சலடித்துச் சென்று விட்டார். 

இதனை வீடியோவாக தனது சமூக வலைதளங்களில் பதிவிட்ட கேட்டி, தன்னுடைய நீச்சலில் இதுதான் சிறப்பு வாய்ந்ததாக கூறுகிறார். மேலும், இது போல் உங்களால் நீச்சலடிக்க முடியுமா என்றும் சவால் விட்டுள்ளார்.

அவர் தலையில் வைத்த டம்ளரில் இருந்து ஒரு துளி பால் கூட சிந்தவில்லை. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், இது போல் தங்களால் செய்யவே முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். கெட்டியின் இந்த நீச்சல் வீடியோ சுமார் 2.7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன. மேலும், ஆயிரக்கணக்கானோர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

டுவிட்டரில் இந்த வீடியோ 2.7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன:

Click for more trending news