This Article is From Aug 21, 2020

உங்களுக்கு எப்போதாவது ‘யூஸ்லெஸ்…’ என்னும் உணர்வு வருகிறதா..?- இந்த படத்தை ஞாபகம் வச்சிக்கோங்க

பலரும் படத்திற்கு கீழ் பல்வேறு கமென்ட்ஸ்களை இட்டு வருகின்றனர். 

உங்களுக்கு எப்போதாவது ‘யூஸ்லெஸ்…’ என்னும் உணர்வு வருகிறதா..?- இந்த படத்தை ஞாபகம் வச்சிக்கோங்க

சிலர், ‘யூஸ்லெஸ்’ வேலைகள் என்பதற்கு வேறு சில உதாரணங்களையும் படமாக பகிர்ந்துள்ளனர்.

மஹிந்திரா வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தன் ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது மிக உணர்ச்சிப் பொங்கும் பதிவுகளையும், நெகிழ்ச்சிப் பதிவுகளையும், ஆச்சரியப் பதிவுகளை பகிரக்கூடியவர். அவர் லேட்டஸ்டாக பகிர்ந்துள்ள ஒரு போட்டோவும், அதனுடன் அவரிட்ட கருத்தும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. 

2016 ஆம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைத்தான் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் உலகத்தின் சிறந்த நீச்சல் வீரர்களில் ஒருவர் போட்டிக்குத் தயாராக, அவருக்குப் பின்னால் ஒரு ‘லைஃப் கார்டு' சோகமாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்கிறார். இந்தப் படத்தைத்தான் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து, “இந்தப் படத்தைப் பார்த்தால் நகைச்சுவையாக உள்ளது. அதே நேரத்தில் யோசிக்கவும் வைக்கிறது. எந்த ஒரு வேலையும் முக்கியமற்றது கிடையாது. இன்று பணியை ஆரம்பிக்கும் முன்னர் இந்தப் படம் தரும் செய்தியை நினைவில் கொள்வது நல்லது” என்று பதிவிட்டுள்ளார். 

அந்தப் படத்திற்கு உள்ளேயும், “நீங்கள் எப்போதாவது யூஸ்லெஸ் என்று நினைத்தால், ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் ஒருவர் லைஃப் கார்டாக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. 

மஹிந்திரா, இப்படத்தைப் பகிர்ந்ததிலிருந்து பல்லாயிரம் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. 

படத்தையும் மஹிந்திரா கருத்திட்ட பதிவையும் பார்க்க:

பலரும் படத்திற்கு கீழ் பல்வேறு கமென்ட்ஸ்களை இட்டு வருகின்றனர். 

இன்னும் சிலர், ‘யூஸ்லெஸ்' வேலைகள் என்பதற்கு வேறு சில உதாரணங்களையும் படமாக பகிர்ந்துள்ளனர். 

ஆனந்த் மஹிந்திராவை, ட்விட்டரில் 80 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். 

Click for more trending news


.