This Article is From Dec 14, 2018

பெர்த் டெஸ்ட்: சிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா!

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் துவங்கியது

பெர்த் டெஸ்ட்: சிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா!

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் துவங்கியது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் டெஸ்ட்டில் ஆடிய அதே அணியே இரண்டாவது டெஸ்டிலும் தொடரும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் தெரிவித்தார். இந்திய அணியை பொறுத்தமட்டில் முதல் டெஸ்ட்டுக்கு பின் காயம் காரணமாக வெளியேறிய ரோஜித் மற்றும் அஷ்வினுக்கு பதிலாக விஹாரி மற்றும் உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டாஸுக்கு பிறகு பேசிய கோலி இந்தியாவும் பேட்டிங் செய்யவே நினைத்தது. இருந்தாலும் வேகப்பந்துக்கு சாதகமான பெர்த்தில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதால் பிரச்சனை இல்லை என்றார். பின்ச் மற்றும் மார்க்கஸ் ஆட்டத்தை துவங்கியுள்ளனர்.

இந்திய அணி காயத்தால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறது. இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினும், முன்னணி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மாவும் காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடமட்டார்கள் என அணி நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இடம்பெறாத இளம் வீரர் ப்ரித்வி ஷா இன்னும் குணமடையாததால் இந்த டெஸ்ட்டிலும் இடம்பெறவில்லை.

முதல் டெஸ்ட்டை இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அணி விவரம்:

இந்தியா:

விராட் கோலி(கேப்டன்), விஜய், புஜாரா, ராகுல், ரஹானே, விஹாரி, பன்ட், இஷாந்த் ஷர்மா, ஷமி, பும்ராஜ், உமேஷ் யாதவ்

ஆஸ்திரேலியா:

மார்கஸ் ஹாரிஸ், பின்ச், கவாஜா, ஷான் மார்ஷ், ட்ராவிஸ் ஹெட், ஹாண்ட்ஸ்கோம்ப், டிம் பெய்ன்(கேப்டன்), ஹேசல்வுட், கம்மின்ஸ், நாதன் லயன், ஸ்டார்க்.

இரண்டாவது டெஸ்ட்டின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா நிதான ஆட்டத்தையே தொடர்ந்தது. இந்திய வீரர்கள் விக்கெட்டை வீழ்த்த முயற்சிகள் பலனளிக்காமல் போனது. பின்ச் 28 ரன்களுடனும், மார்க்கஸ் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இரண்டாவது டெஸ்ட்டின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா உணவு இடைவேளை வரை விக்கெட்டை இழக்காமல் இருந்தது. ஆனால் உணவு இடைவேளைக்கு பின் இந்திய வீரர்கள் மேலும் துல்லியமாக பந்துவீசினர். துவக்க வீரர்கள் பின்ச்,மார்க்ஸ் இருவரும் அரைசதமடித்தனர். பின்ச் 50 ரன்களிலும், மார்க்ஸ் 70 ரன்களிலும் முறையே பும்ராஹ் மற்றும் விஹாரி பந்தில் ஆட்டமிழந்தனர்.

உஸ்மான் கவாஜா இந்த போட்டியிலும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் விஹாரி, உமேஷ், பும்ராஹ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸி வீரர்கள் திணறி வருகின்றனர். ஷான் மார்ஷ் 8 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்திருந்த ஆஸ்திரேலியா. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஹேண்ட்ஸ்கோம்பை இழந்தது. பின்னர் ஓரள‌வுக்கு சுதாரித்து ஆடிய மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் இணைந்து 84 ரன்கள் குவித்தனர். பின்னர் இருவரும் விஹாரி மற்றும் இஷாந்த் ஷர்மா பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா ஏற்படுத்தி வைத்திருந்த வலுவான தொடக்கம் வீணானது. சிறப்பாக ஆடிய ஹெட் 58 ரன் குவித்து வெளியேறினார்.

ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் பெய்ன் 16 ரன்களுடனும், கம்மின்ஸ் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் இஷாந்த், விஹாரி தலா 2 விக்கெட்டுகளையும், உமேஷ், பும்ராஹ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஒரு கட்டத்தில் 400 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

.