This Article is From Apr 20, 2019

காதல் காட்சியில் ஆற்றில் கவிழ்ந்த காதலர்கள் - வைரலாகும் வீடியோ

“தண்ணீருக்குள் தவறி விழுவது முழுக்க முழுக்க எங்கள் போட்டோகிராபரின் ஐடியா… இது குறித்து காதல் தம்பதியினருக்கு ஏதும் தெரியாது” என்று தெரிவித்தார்.

காதல் காட்சியில் ஆற்றில் கவிழ்ந்த காதலர்கள் - வைரலாகும் வீடியோ

டிஜின் மற்றும் ஷில்பா வீடியோ காட்சி

தன் வாழ்நாளில் வரும் சிறப்பான நாளான திருமண நாளுக்கான புகைப்படங்களை எடுக்க பலரும் தற்போது விரும்புகின்றனர். 

திருமண புகைப்படக்காரர்கள் புகைப்படங்களை நேர்த்தியாக எடுக்க விதவிதமான வழிகளை பின்பற்றுகிறார்கள். இன்று திருமணப் புகைப்படங்களை எடுத்த வீடியோ காட்சி வெகுவாக வைரலாகியுள்ளது. திருமணப் புகைப்படம் எடுக்க தோணி ஒன்றில் அமர்ந்திருந்த காதலர்கள் ஆற்றுக்குள் விழும் காட்சிகளை பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை வெட்ப்ளானர் வெட்டிங் ஸ்டுடியோவினர் ஆன்லைனில் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோவில் பம்பா ஆற்றில்  தோணியில் காதலர்கள் உட்கார்ந்திருக்க தலையில் வாழை இலையுடன் காதலுடன் பார்த்த தருணத்தில் திடீரென்று தோணி சமநிலை கவிழ்ந்து ஆற்றில் விழுகின்றனர். வெட்ப்ளானர் திருமண ஸ்டூடியோவின் செய்தி தொடர்பாளர் NDTVயிடம் பேசிய போது “தண்ணீருக்குள் தவறி விழுவது முழுக்க முழுக்க எங்கள் போட்டோகிராபரின் ஐடியா… இது குறித்து காதல் தம்பதியினருக்கு ஏதும் தெரியாது” என்று தெரிவித்தார்.

அந்த வீடியோவை கீழே காணலாம்.

திங்களன்று ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த வீடியோ பேஸ்புக்கில் 2 லட்சம் பேர் இதை பார்த்துள்ளனர் என்று தெரிவித்தார்.

திருமணத் தம்பதியினரும் இந்த ஐடியாவை விரும்பியுள்ளனர். பலரும் கமெண்ட்டில் பாராட்டியுள்ளனர். 

Click for more trending news


.