This Article is From Feb 15, 2019

காஷ்மீர் தாக்குதல் விவகாரம்: அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார் மோடி

மத்திய பிரதேசத்தில் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்த மோடி முடிவு செய்திருந்தார். அது தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

காஷ்மீர் தாக்குதல் விவகாரம்: அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார் மோடி

மூத்த அமைச்சர்களுடன் காஷ்மிர் தாக்குதல் தொடர்பாக மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஹைலைட்ஸ்

  • முக்கிய அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்
  • மத்திய பிரதேசத்தில் அரசியல் நிகழ்ச்சிகளை மோடி தவிர்த்துள்ளார்
  • ராகுல் காந்தி, பிரியங்காவும் நிகழ்ச்சிகளை தவிர்த்துள்ளனர்
New Delhi:

ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது அரசியல் நிகழ்ச்சிகளை ரத்து செய்திருக்கிறார். மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதால் மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இன்று காலை அவர் பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். 

skqlk23o

இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படை தலைமை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மோடியின் மத்திய பிரதேச தேர்தல் பொதுக் கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தாக்குதல் குறித்து பேட்டியளித்த அவர் வீரர்களின் தியாகம் வீண் போகாது. ஒட்டுமொத்த இந்தியாவும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருடன் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைக்கு ஜி-20 நாடுகளின் தூதர்களுடன் மதிய உணவு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கவிருப்பதாக இருந்தது. அதனை ராகுல் ரத்து செய்திருக்கிறார். நேற்று மாலை பிரியங்கா காந்தி தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்தார். துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவது சரியானதாக இருக்காது என்று அவர் கூறியிருந்தார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 ரிசர்வ் போலீசார் உயிரிழந்தனர்.

 

மேலும் படிக்க - "காஷ்மீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்"

.