கர்நாடகாவில் காங்கிரசிலிருந்து விலகிய எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்

பாஜகவில் சேர்ந்துள்ள உமேஷ் ஜாதவ் மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கர்நாடகாவில் காங்கிரசிலிருந்து விலகிய எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்

எட்டியுயூரப்பா முன்னிலையில் உமேஷ் ஜாதவ் பாஜகவில் சேர்ந்த காட்சி


Kalaburagi: 

ஹைலைட்ஸ்

  1. Umesh Jadhav resigned from the Congress two days ago
  2. He joined BJP in Kalaburagi before PM Modi's address at a rally there
  3. He likely to be BJP's candidate for the Kalaburagi seat in the 2019 polls

கர்நாடகாவில் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. உமேஷ் ஜாதவ் எட்டியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்திருக்கிறார். அவர் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் கலபுராகி தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உமேஷ் கட்சியில் சேர்ந்தததை வரவேற்றுள்ள கர்நாடக மாநில பாஜக தலைவர் எட்டியூரப்பா, இந்த நிகழ்வால் தான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக கூறியுள்ளார். 

கட்சியில் சேர்ந்திருக்கும் உமேஷ் ஜாதவுக்கு வரவிருக்கும் மக்களவை தேர்தலில் கலபுராகி தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கும் என்று பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

கலபுராகி தொகுதி என்பது காங்கிரசின் கோட்டையாக உள்ளது. இங்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 9 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது அரசியல் வரலாற்றில் ஒருமுறை கூட தேர்தலில் அவர் தோல்வியடைந்தது இல்லை. 

முன்னதாக கட்சியில் இருந்து விலகிய உமேஷ் யாதவை துரோகி என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்து வந்தது. இதேபோன்று ரமேஷ் ஜர்கோலி, நாகேந்திரா, மகேஷ் கும்தலி ஆகியோரும் விரைவில் காங்கிரசை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இருப்பினும், உமேஷ் ஜாதவின் ராஜினாமா கடிதத்தை கர்நாடக சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................