This Article is From May 27, 2020

ஜூன்.1 முதல் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்: எடியூரப்பா கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் மாத இறுதியில் பிரதமர் மோடி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது முதல், நாடு முழுவதும் மத வழிபாட்டு தலங்களில் கூட்டம் கூடும் என்ற காரணத்தினால் மூடப்பட்டிருக்கின்றன.

ஜூன்.1 முதல் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்: எடியூரப்பா கோரிக்கை

Bengaluru:

கர்நாடகாவில் ஜூன்.1ம் தேதி முதல் கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறும்போது, ஒவ்வொன்றையும் திறப்பதற்கு முன்பு நாம் நிறைய அனுமதிகளை பெற வேண்டும். அதனால், காத்திருந்து பார்ப்போம். நமக்கு அனுமதி கிடைத்தால் ஜூன்.1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் மாத இறுதியில் பிரதமர் மோடி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது முதல், நாடு முழுவதும் மத வழிபாட்டு தலங்களில் கூட்டம் கூடும் என்ற காரணத்தினால் மூடப்பட்டு இருக்கின்றன. 

தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், படிப்படியாக கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. எனினும், பொதுபோக்குவரத்து, மற்றும் மதவழிபாட்டு தலங்கள் போன்றவற்றுக்கு தடை நீடிக்கிறது. 

பாஜக அரசு ஆளும் கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு முன்பு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக காத்திருந்தே மாற்றம் செய்யப்படுகிறது. 

முன்னதாக, ஜூன் மாதத்தில் கோயில்கள் திறக்கப்படும் என்று மாநில அமைச்சர் கோட்டா சீனிவாஸ் நம்பிக்கை தெரிவித்திருந்தார். சமூக இடைவெளி மற்றும் சுகாதாரத்தை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். எனினும், மத கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது - இதுபோன்ற சில நிகழ்வுகள் உண்மையில் ஊரடங்கு தடைகளை மீறி மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

.