This Article is From Dec 23, 2019

ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்: பாஜக - காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி!

Jharkhand Election Results 2019: மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக கடந்த நவ.30 முதல் டிச.20 வரை நடைபெற்றது.

ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் 2019: பிற்பகல் 1 மணி அளவில் முடிவுகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்லுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்சா (JMM), காங்கிரஸ் கூட்டணி மற்றம் ஆளும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்சா - ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணியே வெற்றி பெரும் என கணித்துள்ளன. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிச.20ம் தேதி வரை 5 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 14 இடங்களில் 11 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 

ஜார்கண்டில் மொத்தமுள்ள 24 மாவட்ட தலைமையகத்தில் இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே ஆளும் பாஜக - காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

கடந்த 2014 சட்டமன்ற தேர்தலில் பாஜக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜார்கண்ட் மாணவர்கள் கூட்டமைப்பு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 6 தொகுதிகளிலே வெற்றி பெற்றது. 

இந்த முறை பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் கூட்டமைப்பு தேர்தலில் தனியாக போட்டியிட்டது. 

முன்னாள் முதல்வர் ஹேமந்த் சேரான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஹேமந்த்க்கு எதிராக பாஜக மாநில அமைச்சர் லூயில் மராண்டியை களமறிக்கியது.

எனினும், ஜே.எம்.எம் ஒரு முரண்பாடான கருத்தை கொண்டிருந்தது. "பெரும் கூட்டணிக்கே பெரும்பான்மை கிடைக்கும். மக்கள் பாஜக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்" என்று கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் பாண்டே கூறியுள்ளார்.

ஹேமந்த் சோரனையே எதிர்கட்சிகள் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தி வருகிறது. இவர் மூன்று முறை முதல்வராக இருந்த ஷிபு சோரனின் மகன் ஆவார். ஏற்கனவே கடந்த 2013 முதல் 2014 வரை முதல்வராகவும் இருந்துள்ளார். 

.