This Article is From Jul 06, 2019

ஜெய் ஶ்ரீராம் ஸ்லோகம் மக்களை அடிக்கவே பயன்படுத்தப்படுகிறது - அமர்த்தியா சென்

சமீப நாட்களில் இங்கு ராம நவமி அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனையும் நான் இதற்கு முன் கேட்டறியவில்லை.

ஜெய் ஶ்ரீராம்  ஸ்லோகம் மக்களை அடிக்கவே பயன்படுத்தப்படுகிறது - அமர்த்தியா சென்

சில மதத்தை சேர்ந்தவர்கள் வெளியில் நடமாடவே பயப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்

Kolkata:

இந்திய பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்ற தத்துவயியலாளரான அமர்த்தியா சென் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது, இதற்கு முன் இங்கு ஜெய் ஸ்ரீராம் என கூறி நான் கேட்டதில்லை.  இது மக்களை அடித்து, தாக்குவதற்கு சமீப காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

“வங்காள கலாசாரத்துடன் இதற்கு எந்த தொடர்பும் இல்லை என நான் நினைக்கிறேன்.  சமீப நாட்களில் இங்கு ராம நவமி அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனையும் நான் இதற்கு முன் கேட்டறியவில்லை.

எனது 4 வயது பேத்தியிடம், உனக்கு பிடித்த கடவுள் எது? என்று கேட்டேன்.  அதற்கு அவள் அன்னை துர்க்கை என கூறினாள்.  அன்னை துர்க்கையின் முக்கியத்துவம் ஆனது ராம நவமியுடன் ஒப்பிட முடியாதது”  என்று அவர் கூறியுள்ளார்.

சில மதத்தை சேர்ந்தவர்கள் வெளியில் நடமாடவே பயப்படுகின்றனர் எனத் தெரிவித்தார். இந்த கருத்துக்கு பதில் அளித்த மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், “அமர்த்தியா சென்னுக்கு அநேகமாக வங்காளத்தை  அறிந்திருக்க மாட்டார். அவருக்கு பெங்காலி அல்லது இந்திய கலாசாரம் பற்றி தெரியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

.