This Article is From Sep 11, 2020

கொரோனா தொற்று முடிந்துவிட்டது! பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு!!

முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா நெருக்கடியை அலட்சியமாக பார்க்கக்கூடாது என்றும், முககவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றினை தடுப்பூசி கண்டறியப்படும் வரை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

கொரோனா தொற்று முடிந்துவிட்டது! பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு!!

பிரதமரின் கட்சியை சார்ந்த நபர்களே கொரோனா தொற்று குறித்து அலட்சியமாக பேசுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், கொரோனா தொற்று நெருக்கடி முடிந்துவிட்டது என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் வரும் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள சூழலில் மாநிலத்தில் தேரதல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், “கொரோனா வைரஸ் போய்விட்டது, மம்தா பானர்ஜி பாஜகவால் மாநிலத்தில் கூட்டங்களையும் பேரணிகளையும் ஏற்பாடு செய்ய முடியாத வகையில் பூட்டுதல்களை நடித்து திணிக்கிறார். எங்களை யாரும் தடுக்க முடியாது.” என மாநிலத்தில் நடந்த பேரணி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 45 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 96,551 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1,209 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் பாஜக தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா நெருக்கடியை அலட்சியமாக பார்க்கக்கூடாது என்றும், முககவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றினை தடுப்பூசி கண்டறியப்படும் வரை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரதமரின் கட்சியை சார்ந்த நபர்களே கொரோனா தொற்று குறித்து அலட்சியமாக பேசுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.