போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி

இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. 

போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி

போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி

ஹைலைட்ஸ்

  • போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா?
  • மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும்.
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? என மருத்துவர்கள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

உலகளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதையொட்டி பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு நாடுகளும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன. அந்தவகையில், கொரோனா பரவலை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இந்தியாவும், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

எனினும், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், 27 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று வரை 50 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பதிவில், போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? என மருத்துவர்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதில், போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? 

முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.