This Article is From Oct 25, 2019

சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 10 கிலோ மீட்டர் ஜாக்கிங் சென்ற மம்தா பானர்ஜி!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தற்போது 64 வயது ஆகிறது. உடல் நலனில் அதிக அக்கறை கொண்டிருக்கும் அவர், தினமும் ட்ரெட்மில்லில் நடந்து வருகிறது. அவரது ஜாக்கிங் வீடியோவை பார்த்து பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 10 கிலோ மீட்டர் ஜாக்கிங் சென்ற மம்தா பானர்ஜி!!

மலைப்பகுதியில் அதிகாரிகள், பாதுகாவலர்களுடன் ஜாக்கிங் செல்லும் மம்தா பானர்ஜி.

Darjeeling:

.

சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 10 கிலோ மீட்டர் ஜாக்கிங் சென்றார். இந்த வீடியோவைப் பார்த்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். 

பாதுகாப்பு காரணங்களுக்காக மம்தா பானர்ஜி வீட்டில் உள்ள ட்ரெட்மில்லில் நடப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் முதன்முறையாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வெளியே அவர் ஜாக்கிங் சென்றிருக்கிறார். 

டார்ஜிலிங் மலைப் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மம்தாவுடன் அரசு அதிகாரிகள், பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உடன் சென்றனர். 
 

இதுகுறித்து மம்தா தனது ட்விட்டர் பக்கத்தில், 'சர்வதேச பருவ நிலை மாறுபாடு விழிப்புணர்வு நாளான இன்று, சுற்றுச் சூழலையும் , பூமியையும் பாதுகாக்க நம்மால் இயன்றவற்றை செய்வோம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்' என கூறியுள்ளர். 

தனது ஜாக்கிங்கின்போது, உள்ளூர் மக்களுடன் மம்தா கலந்துரையாடினார். அவர்களிடம் குறைகேட்ட முதல்வர், சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். 

(With inputs from PTI)

.