This Article is From Jun 24, 2020

கொரோனா பாதித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமோனாஷ் உயிரிழப்பு!

3 முறை ஃபால்டா தொகுதி எம்எல்ஏவாகவும், கட்சி பொருளாளராகவும் இருந்த தாமோனாஷ் கோஷ், இன்று எங்களை விட்டு பிரிந்துவிட்டார்.

கொரோனா பாதித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமோனாஷ் உயிரிழப்பு!

கொரோனா பாதித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமோனாஷ் உயிரிழப்பு!

ஹைலைட்ஸ்

  • திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமோனாஷ் உயிரிழப்பு
  • கடந்த மாதம் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்பட்டது.
  • தாமோனாஷ் நிரப்ப முடியாத ஒர் வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளார் - மம்தா
Kolkata:

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமோனாஷ் கோஷ் (60) மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டது. 

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மிகுந்த வருத்தமாக இருக்கிறது. 3 முறை ஃபால்டா தொகுதி எம்எல்ஏவாகவும், கட்சி பொருளாளராகவும் இருந்த தாமோனாஷ் கோஷ், இன்று எங்களை விட்டு பிரிந்துவிட்டார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருந்த அவர், மக்களுக்காகவும், கட்சிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளார். அவர் தனது சமூக பணி மூலம் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளார்.

தாமோனாஷ் நிரப்ப முடியாத ஒர் வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளார். அனைவரின் சார்பாக, அவரது மனைவி ஜார்னா, அவரது இரண்டு மகள்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மம்தா கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொது வாழ்க்கையில் இருந்த தாமோனாஷ் கோஷ் மரணமடைந்துள்ளார். ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் தமிழகத்தில் திமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனா வைரஸூடன் போராடி சென்னையில் உயிரிழந்தார். 

கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வைரஸால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். 
 

.