This Article is From Jun 28, 2018

நீரிழிவுக்கு இனி இன்சுலின் ஊசி வேண்டாம்!

நீரிழிவின் முதல் கட்டத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைப்பதற்காக இன்சுலின் ஊசிகள் பயன்படுத்துவது வழக்கம்

நீரிழிவுக்கு இனி இன்சுலின் ஊசி வேண்டாம்!

நீரிழிவின் முதல் கட்டத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைப்பதற்காக இன்சுலின் ஊசிகள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இன்சுலின் ஊசிகளைப் பயன்படுத்துவதை விட இன்சுலின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது வலியில்லாத நிவாரணமாக இருந்தால்..?

இதற்காக அறிவியலாளர்கள் முதல் நிலை நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்காக இன்சுலின் மாத்திரைகள் தயாரிக்கும் முயறசியில் உள்ளனர். ஊசி என்றாலே பயம் உள்ளவர்களுக்கு இந்த இன்சுலின் மாத்திரை மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத்திரை மனிதனுக்கு இயற்கையாக மண்ணீரலில் சுரக்கும் இன்சுலின் போலவே உடலுக்குள் சேரும். உடலில் இன்சுலினின் அளவு குறையும் போதுதான் சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய், உடல் பருமன், மற்றும் இருதய பாதிப்புகள் போன்ற இடர்பாடுகள் தாக்கிவிடுகின்றன.

 

inejction

 

உடலின் இன்சுலின் அளவுதான் நமது உடலுக்குத் தேவையான சரியான அளவீடில் க்ளுகோஸ் நிலையை வைத்திருக்கும். ஆனால், இந்த இன்சுலின் உணர்வு குறையும் போது தான் தொடர் உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்குகின்றன. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இருக்க வேண்டிய அளவீடை விட அதிகரிக்கும் போது நீரிழிவின் இரண்டாம் கட்டத்துக்கு உடல் தள்ளப்படும். ஆரோக்கியமான வழியில் சரியான அளவில் இன்சுலினை நீடிக்கச் செய்ய நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு இன்சுலின் ஊசிகளும், மாத்திரைகளும் உதவுகின்றன.

 

weight loss

 

உடலில் இன்சுலின் அளவை ஆரோக்கியமாகப் பாதுகாக்க சில வழிகள் உள்ளன:

உடற்பயிற்சி

இன்சுலின் அளவீடை அதிகம் சுரக்கச் செய்து நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதிகமாக உடற்பயிற்சி செய்தால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு ரத்தத்திலேயே தேங்காமல் உடலின் தசைப் பகுதிகளுக்குச் சென்று சேரும். இது மண்ணீரலை இன்சுலின் சுரக்க உந்துதலாக அமையும்.

மன அழுத்தம் வேண்டாம்!

நீரிழிவு நோயை இரண்டாம் கட்டத்துக்கு எடுத்துச் செல்வது மன அழுத்தம் தான். இன்சுலின் சுரப்பியைத் தாக்கும் வலிமை மன அழுத்தத்துக்கு உண்டு. இதனால் உடல் சோர்வடையும் அல்லது கோப உணர்வுகள் அதிகரிக்கத் தொடங்கும். அதிகமான மன அழுத்தம் உடலின் ஹார்மோன் சுரப்பிகளைப் பாதித்து ரத்த அளவையும் அதிகரிக்கச் செய்துவிடும்.

 

green tea

எடை குறைதல்

பருமனான உடல்வாகு நீரிழிவு பாதிப்பை அதிகரிக்கச் செய்யும்.  உடலில் சேரும் அதிகப்படியான எடை இன்சுலின் உற்பத்தியையே தடுத்துவிடும். அதனால் அளவுக்கு அதிகமாக உடலில் எடை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகளைத் தடுக்க வேண்டும்.

ஆப்பிள் வினிகர்

இன்சுலின் உணர்வை சரியான விகிதத்தில் வைக்க வினிகர், எலுமிச்சை போன்ற உணவுகள் உதவும். உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருவதாக ஆப்பிள் சிடர் வினிகர் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவும்.

 

பெறுப்புத்துறப்பு: மேலே கூறப்பட்டுள்ளவை பொதுவான மருத்துவத் தகவல்களே. நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் ஆலோசனை அல்ல. சம்பந்தப்பட்ட மருத்துவர்களை சந்தித்து உங்கள் உடல் நிலைக்குத் தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும். இதற்கு NDTV எவ்வித பொறுப்பும் ஏற்காது.

.