This Article is From Jul 03, 2018

புற்றுநோய் பாதிப்பு: நம்பிக்கையூட்டும் புதிய சிகிச்சை முறைகள்!

புற்றுநோய்க்கு அளித்து வரும் சிகிச்சையில் விஞ்ஞானிகள் மெல்ல அதிக பாதிப்பு ஏற்படுத்தாத சிகிச்சை முறைகளுக்கு மாறி வருகின்றனர்

புற்றுநோய் பாதிப்பு: நம்பிக்கையூட்டும் புதிய சிகிச்சை முறைகள்!

ஹைலைட்ஸ்

  • இம்முனோதெரபி கீமோதெரபிக்கு மாற்றாக பார்க்கப்படுகிறது
  • ஜெனடிக் அனலிசிஸ் புற்று கட்டிகளுக்கு ஏற்ற சிகிச்சையாக பார்க்கப்படுகிறது
  • கீமோதெரபி தான் புற்றுநோய்க்கு பெரும்பாலும் சிகிச்சையாக இருந்து வருகிறது

புற்றுநோய்க்கு அளித்து வரும் சிகிச்சையில் விஞ்ஞானிகள் மெல்ல அதிக பாதிப்பு ஏற்படுத்தாத சிகிச்சை முறைகளுக்கு மாறி வருகின்றனர். அமெரிக்காவின் பால்டிமோரில் இருக்கும் ஜான் ஹாப்கின்ஸ் புற்றுநோய் மையத்தில் சிகிச்சை பெற்ற ஜான் ரியன் மேற்குறிபிட்டுள்ள மாற்று சிகிச்சை முறைக்கு ஒரு நல்ல உதாரணம். ஜான் ஓய்வுபெற்ற அணு ஆலை நிபுணர். அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஜானுக்கு இன்னும் 18 மாதங்களே வாழ்க்கை பாக்கி இருப்பதாக கூறப்பட்டது. அப்போது தான் அவர் ‘இம்முனோதெரபி’ சிகிச்சை முறையை எடுத்துக் கொண்டார். 

cancer 

இந்த மாதம் ஜான் அவரது 74 வது பிறந்தநாளை கொண்டாடப் போகிறார். அது மட்டுமல்லாமல், தனது மூன்று மகன்களின் பட்டமளிப்பு விழாவையும் அவர் பார்த்துவிட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் தனது மகளின் திருமண நிகிழ்ச்சையிலும் ஜான் கலந்து கொள்வார்.

இம்முனோதெரபி சிகிச்சை மூலம் பல நம்பிக்கை துளிர்க்கும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும், மிகவும் குறைந்த அளவிலான புற்று நோயாளிகளுக்குத் தான் அது வெற்றிகரமாக இருந்துள்ளது. ஜான் அந்த வகையில் அதிர்ஷடம் செய்தவராகவே இருக்கிறார். ஆனால், இந்த சிகிச்சை முறை மீது ஃபார்மா நிறுவனங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக, இம்முனோதெரபி ஆய்வுகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்கின்றன ஃபார்மா கம்பெனிகள். 

chemotherapy

புற்றுநோய் பாதிப்புக்குள்ளானால் அதிகமாக கொடுக்கப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு மாற்றாக இம்முனோதெரபி இருக்கும் என நம்பப்படுகிறது. கீமோதெரபியில் பல இடர்பாடுகள் இருக்கின்றன. குறிப்பாக, அதன் செயல் முறை என்பது, கேன்சர் செல்களை குறிவைத்துத் தாக்குவது ஆகும். ஆனால், இந்த சிகிச்சையின் மூலம் சில நல்ல செல்களும் தாக்கப்படும். இதனால் பல பக்க விளைவுகள் வரும். உதாரணத்திற்கு, உடலில் கட்டுக்கடங்காத வலி, முடி கொட்டுதல், வயிற்றுப் போக்கு, மயக்கம் வருதல், உடல் சோர்வடைதல் போன்றவை கீமோதெரபி சிகிச்சைக்குப் பின்னால் நிகழக்கூடும். 

ஆனால் இம்முனோதெரபி சிகிச்சை முறையில், உடலின் எதிர்ப்புசக்தியை வளர்த்து அதன் மூலம் கேன்சர் செல்களுக்கு எதிராக போராடும் வகையில் மாற்றம் செய்யப்படும். இதன் மூலம் கீமோதெரபியில் வரும் பெரும்பான்மையான பக்கவிளைவுகள் இதில் இருக்காது. ஆனால், இம்முனோதெரபி நிறைய நேரங்களில் எதிர்பார்த்த முடிவுகளை தருவதில்லை. 

cancer

ஜான் ரியன் 2013 ஆம் ஆண்டு வரை கீமோதெரபி சிகிச்சையைத்தான் மேற்கொண்டார். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் உடலில் அவருக்குத் தாங்க முடியாத வகையில் அரிப்பு ஏற்பட்டது. அப்போது தான், அந்த சிகிச்சையிலிருந்து இம்முனோதெரபிக்கு மாறினார். 

நடைமுறையில் 20 இம்முனோதெரபி மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இம்முனோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் புற்றுநோயாளிகளில் 10 முதல் 15 சதவிகிதத்தினரே பிழைக்கின்றனர். ஆனால், இந்த சிகிச்சை முறைதான் புற்றுநோய்க்கு சரியானது என்று மருத்துவத் துறை நம்புகிறது. ஆகவே, கேன்சர் செல்கள் மீது மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் இம்முனோதெரபி மாத்திரைகள் பயன்பாட்டுக்கு வரலாம்.

புற்றுநோய் சிகிச்சையில் பக்கவிளைவுகள் குறைந்த இன்னொரு முறை ஜெனடிக் அனலிசிஸ். புற்றுநோய் கட்டிகளைப் போக்க இந்த முறை சிறந்தவையாக இருக்கும் என மருத்துவத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். புற்றுநோய் வந்துவிட்டால் அதை ஆராய்ந்து எந்த வகை சிகிச்சை முறை சரியாக இருக்கும் என்று கணிக்கும் அளவுக்குத் தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. பாதிப்புகள் தரும் பழைய சிகிச்சை முறைகளுக்கு மாற்றாக பல புதிய நம்பிக்கை தரும் சிகிச்சைகள் மெதுவாக பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

.