This Article is From May 03, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,000ஐ தாண்டியது: ஒரே நாளில் 2,293 பேர் பாதிப்பு!

Coronavirus Cases, India: தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் சதவீதம் 26.64 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 9,951 பேர் குணமைடந்துள்ளனர்.

Coronavirus Cases, India: கொரோனா பாதிப்பால் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,000ஐ தாண்டியது
  • கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 2,293 பேர் பாதிப்பு!!
  • மேலும், 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
New Delhi:

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 2,293 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்தமாகப் பாதிப்பு எண்ணிக்கையானது, 37,336ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, கொரோனா பாதிப்பால் இதுவரை 1,218 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த மார்ச்.25ம் தேதி அமலான ஊரடங்கு உத்தரவு மேலும், 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து, மூன்றாவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தைச் சீர்படுத்தும் விதமாக பல்வேறு மண்டலங்களாகக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கொரோனா பாதிப்பு அளவீடுகளின் அடிப்படையில், சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டு, பல்வேறு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இந்தியாவின் பொருளாதார ரீதியாக மிக முக்கியமான நகரங்களான - டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட அனைத்து நகரங்களும் சிவப்பு மண்டலங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த நகரங்கள் கடுமையான முடக்கத்தில் இருக்கும். மேலும், மத்திய அரசு பல்வேறு பகுதிகளிலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினாலும், விமானம், ரயில், மெட்ரோ மற்றும் சாலை வழியாக மாநிலங்களுக்கு இடையேயான பயணங்கள் நாடு முழுவதும் தடைசெய்யப்படும். பள்ளிகள், கல்லூரிகள், ஹோட்டல்கள், உணவகங்கள்; சினிமாக்கள், மால்கள், ஷாப்பிங் சென்டர்கள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை செயல்படுவதற்கு தற்போது அனுமதி கிடையாது. 

தொடர்ந்து, அனைத்து அத்தியாவசியமற்ற தேவைகளுக்காகவும் தனிநபர்கள் யாரும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வெளியே வருவதற்கு கண்டிப்பாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வணிகங்கள், மற்றும் தனியார் அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம், மீதமுள்ள நபர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் சதவீதம் 26.64 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 9,951 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்றுநோயால் நாடு தழுவிய முடக்கம் காரணமாகச் சிக்கித் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக, அவர்கள் வீடு திரும்புவதற்கு வசதியாகச் சிறப்பு ரயில்களை அரசு நேற்றைய தினம் அறிவித்துள்ளது. இதுபோன்று சிக்கித் தவிக்கும் நபர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையாகத் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தொடர்ந்து, அவர்களுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டு, அறிகுறியில்லாதவர்கள் கண்டறியப்பட்டு,  அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்களில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்கும் விட நாடு தழுவிய முடக்கம் காரணமாகச் சிக்கித் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக, அவர்கள் வீடு திரும்புவதற்கு வசதியாகச் சிறப்பு ரயில்களை அரசு நேற்றைய தினம் அறிவித்துள்ளது. இதுபோன்று சிக்கித் தவிக்கும் நபர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையாகத் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தொடர்ந்து, அவர்களுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டு, அறிகுறியில்லாதவர்கள் கண்டறியப்பட்டு,  அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்களில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.