This Article is From Jun 11, 2020

கொரோனா பாதித்த உலக நாடுகள் வரிசையில் 4வது இடத்தில் இந்தியா!

ரஷ்யாவில் தற்போது 4.93 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இந்த எண்ணிக்கையானது 7.72 லட்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதித்த உலக நாடுகள் வரிசையில் 4வது இடத்தில் இந்தியா!
New Delhi:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 2,93,754 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக பிரிட்டன்(UK) 2,91,588 தொற்று நோயாளிகளைக் கொண்டு நான்காவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்தியாவானது, அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்த நிலையில் உள்ளது.

ரஷ்யாவில் தற்போது 4.93 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இந்த எண்ணிக்கையானது 7.72 லட்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 24-ம் தேதியன்று இந்தியா, கொரோனா பாதித்த உலக நாடுகளின் வரிசையில் 10 வது இடத்தில் இருந்தது. தொடர்ந்து 18 நாட்களில் 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

.