This Article is From Aug 15, 2018

“தேவையற்ற செயல்களில் கவனச் சிதறல் வேண்டாம்” - குடியரசுத் தலைவர் உரை

தேவையற்ற செயல்களில் கவனத்தை சிதறவிடக் கூடாது என்று நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்தார்

New Delhi:

புதுடில்லி: 72வது சுதந்திர தினத்தையொட்டி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைகாட்சி மூலம் உரையாற்றினார்.

இந்திய நாடு, முக்கிய இலக்குகளை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நேரத்தில், தேவையற்ற செயல்களில் கவனத்தை சிதறவிடக் கூடாது என்று நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்தார்.

மகாத்மா காந்தியின் அகிம்சை என்ற கொள்கை மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் என்றும், சுதந்திரப் போராட்டத்தின் கொள்கைகளை நிலைநிறுத்த, ஒவ்வொரு இந்தியரும் தங்களது பணியை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாட்டில் அமைதியை நிலைநாட்ட, பாதுகாப்புப் படையினர் தங்களது பங்களிப்பை செய்து வருகின்றனர் என்றார்.

நாட்டு வளர்ச்சிக்காக இப்போது எடுக்கப்படும் முடிவுகளும், செயல்படுத்தப்படும் திட்டங்களும் பின்னாளில் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றார். வறுமை ஒழிப்பு, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், நாட்டின் வளர்ச்சி நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும். இளைஞர்கள் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என்றார்.

.