This Article is From Aug 14, 2020

சுதந்திர தினத்தினை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரை!

இந்த சந்தர்ப்பத்தில், நம்முடைய சுதந்திர போராளிகளின் தியாகங்களை நன்றியுடன் நினைவில் கொள்கிறோம். அவர்களின் தியாகத்தின் காரணமாக, நாம் அனைவரும் இன்று ஒரு சுதந்திர நாட்டில் வசித்துக்கொண்டிருக்கிறோம்.

சுதந்திர தினத்தினை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரை!
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 25 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடையே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நாட்டின் முயற்சிகளை குடியரசுத் தலைவர் பாராட்டியதோடு மத்திய அரசு இந்த நெருக்கடியை முன்கூட்டியே தடுத்து, சரியான நேரத்தில் முடிவுகளை எடுத்தது என்றும், இந்த முடிவுகள் சவாலை எதிர்கொள்ள உதவியது என்றும் மக்களின் ஒத்துழைப்பு சிறப்பானது என்றும் அதற்காக அவர் பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தில், நம்முடைய சுதந்திர போராளிகளின் தியாகங்களை நன்றியுடன் நினைவில் கொள்கிறோம். அவர்களின் தியாகத்தின் காரணமாக, நாம் அனைவரும் இன்று ஒரு சுதந்திர நாட்டில் வசித்துக்கொண்டிருக்கிறோம்.

மகாத்மா காந்தி நம்முடைய சுதந்திர இயக்கத்தின் வழிகாட்டியாக இருந்தார் என்பது நம்முடைய அதிர்ஷ்டம். ஒரு துறவிக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு அவரது ஆளுமையில் பிரதிபலித்தது இந்தியாவில் மட்டுமே சாத்தியமானது.

இந்த ஆண்டு, சுதந்திர தின விழாக்கள் வழக்கம் போல் நடக்காது. இதற்கான காரணம் வெளிப்படையானது. உலகம் முழுவதுமே ஒரு கொடிய வைரஸின் பாதிப்பில் சிக்கிக் கொண்டு, உயிர் சேதத்தினை சந்தித்து வருகிறது. மட்டுமல்லாமல் அனைத்து வகையான செயல்களுக்கும் இடையூறாக உள்ளது.

இந்த சவாலை எதிர்கொள்ளும் பொருட்டு, மத்திய அரசு நிலைமை கட்டுக்குள் கொண்டு வர சரியான நேரத்தில் சரியான முடிவுகளை மேற்கொண்டது. இந்த முடிவுகள் சவாலை எதிர்கொள்ள உதவியது.

அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் மாறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்ட நமது பரந்த நாடு சவாலை எதிர்கொண்டது.

மாநில அரசுகள் உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்பட்டன. பொதுமக்கள் முழு ஆதரவையும் வழங்கினர். இந்த முயற்சிகளால், உலகளாவிய தொற்றுநோயின் அளவைக் கட்டுப்படுத்தினோம், மேலும் ஏராளமான மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் வெற்றி பெற்றோம். இது முழு தேசத்திற்கும் முன்மாதிரியாக இருந்தது என குடியரசுத்த் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

.