70வது குடியரசு தினம்: ஸ்ரீநகரில் இரண்டு தீவிரவாதிகள் தாக்குதல்!

70வது குடியரசு தினம்: ஸ்ரீநகரில் இரண்டு தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

70வது குடியரசு தினம்: ஸ்ரீநகரில் இரண்டு தீவிரவாதிகள் தாக்குதல்!
Srinagar:

இந்தியாவின் 70 வது குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த முயன்ற இரண்டு தீவிரவாதிகளை ஸ்ரீநகரின் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

ஜமூ மற்றும் காஷ்மீர் பகுதியல் உள்ள கோன்மோக் என்னும் இடத்தில் ஜாய்ஷ் யீ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு தீவரவாதிகளுக்கும் ஸ்ரீநகரின் போலீசாருக்கும் ஏற்பட்ட தக்குதலில் இரண்டு  தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் 3 போலீஸ் அதகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.

அந்த  தீவிரவாதிகளிடமிருந்து இரண்டு ஏ.கே 47 வகை ரைஃவில்களும் வெடிமருந்துகளும் பரிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதைதொடர்ந்து காஷ்மீர் பகுதியல் உள்ள கோன்மோக் இடத்தில் மேலும் சில தீவிரவாதிகள் இருக்கலாம் என வந்த உளவுதுறை அறிக்கையின் படி, வேறு தீவிரவாதிகளும் இதில் தொடர்புகொண்டுள்ளனரா என தேடுதல் வேட்டை நடந்து வருகின்றது.

Newsbeep

‘எங்களிடம் சிக்கிவிடுவோமே என்ற எண்ணத்தில் அவர்கள் தாக்குதலை ஆரம்பித்துவிட்டனர், அதனாலையே இந்த என்கவுன்டர் நடக்கவேண்டியதாக இருந்தது' என மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

குடியரசு தின விழா நடைபெற்று வருகின்ற நிலையில் பலத்தை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இதுபோன்ற மற்றொரு சம்பவத்தில் சி.ஆர்.பி.எஃவ் கேம்ப் அருகே வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.