This Article is From Mar 18, 2020

சம்பவம் நடந்த அன்று நான் டெல்லியில் இல்லை: நிர்பயா குற்றவாளி புதிய மனு!

Nirbhaya Case: கடந்த 2012ம் டிசம்பர் 17ம் தேதிதான் போலீசார் தன்னை ராஜஸ்தானில் கைது செய்ததாகவும், சம்பவம் நடந்த டிசம்பர் 16ம் தேதி தான் டெல்லியில் இல்லை என்றும் மனுவில் முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று நான் டெல்லியில் இல்லை: நிர்பயா குற்றவாளி புதிய மனு!

சம்பவம் நடந்த அன்று நான் டெல்லியில் இல்லை என நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் மனு தாக்கல்.

ஹைலைட்ஸ்

  • சம்பவம் நடந்த அன்று நான் டெல்லியில் இல்லை - நிர்பயா குற்றவாளி
  • போலீசார் தன்னை ராஜஸ்தானில் கைது செய்ததாக தகவல்
  • திட்டமிட்டு தூக்கை தாமதப்படுத்தும் தந்திரம் என அரசு வழக்கறிஞர் வாதம்
New Delhi:

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், அவரது மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, டெல்லி நீதிமன்றத்தில் இன்று புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனுவைக் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணா இன்று விசாரிக்கிறார். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், 'கடந்த 2012ம் டிசம்பர் 17ம் தேதிதான் போலீசார் தன்னை ராஜஸ்தானில் கைது செய்ததாகவும், சம்பவம் நடந்த டிசம்பர் 16ம் தேதி தான் டெல்லியில் இல்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை அதிகாரிகள் தன்னை திகார் சிறையில் கொடுமை செய்வதாகவும் மனுவில் முகேஷ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றவாளி முகேஷ் சிங்கின் மனு மிகவும் அற்பமானது. இது திட்டமிட்டு தூக்கைத் தாமதப்படுத்தும் தந்திரம் என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

கடந்த மார்ச் 5ம் தேதியன்று, குற்றவாளிகள் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26) மற்றும் அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகியோரை மார்ச்.20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்குத் தூக்கிலிடும் படி விசாரணை நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்தது.

டெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயாவை 6 பேர் கும்பல் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்து கொலை செய்து வீசியது. இதையடுத்து இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.  

.