This Article is From Jan 04, 2020

சீக்கிய பக்தர்களை காப்பாற்ற பாகிஸ்தான் பிரதமர் உதவியை நாடும் பஞ்சாப் முதல்வர்!!

பாகிஸ்தானில் உள்ள நங்கனா சாஹிப் சீக்கிய கோயிலுக்குள் பக்தர்கள் அகப்பட்டுள்ளனர். வெளிப்புறத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இன்று மாலை கற்களை வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீக்கிய பக்தர்களை காப்பாற்ற பாகிஸ்தான் பிரதமர் உதவியை நாடும் பஞ்சாப் முதல்வர்!!

சீக்கிய பக்தர்கள் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக தலையிட்டு பக்தர்களை மீட்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

New Delhi:

பாகிஸ்தானில் உள்ள நங்கனா சாஹிப் சீக்கிய கோயிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் கற்களை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோயிலுக்குள்ளே பக்தர்கள் சிலர் சிக்கித் தவிப்பதாக கூறியுள்ள பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், அவர்களை மீட்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அமரிந்தர் சிங் தனது ட்விட்டர் பதிவில், 'நங்கனா சாஹிப் குருத்துவாராக்குள் சீக்கிய பக்தர்கள் உள்ளனர். கோயிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் கற்களை வீசி வருவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இந்த விஷயத்தில் இம்ரான் கான் உடனடியாக தலையிட்டு பக்தர்களையும், வரலாற்று சிறப்பு வாய்ந்த குருத்துவாராவையும் பாதுகாக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

பாகிஸ்தானில் உள்ள நங்கனா சாஹிப் சீக்கிய கோயிலுக்குள் பக்தர்கள் அகப்பட்டுள்ளனர். வெளிப்புறத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இன்று மாலை கற்களை வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், குருத்துவாராவை சேர்ந்த அதிகாரி ஒருவரின் மகளை, உள்ளூர் சிறுவன் கடத்தியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அந்த சிறுவனின் குடும்பத்தினர், கும்பலை அழைத்து வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அகாலி தள எம்.எல்.ஏ. மஞ்சிந்தர் சிங் சிர்சா ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சீககியர்களுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. 

சிர்சா தனது ட்விட்டர் பதிவில், 'நங்கனா சாஹிப் குருத்துவாராவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. சீற்றத்துடன் காணப்படும் முஸ்லிம்கள் கோயிலுக்கு வெளியே உள்ளனர். அவர்கள் சீக்கியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்புகின்றனர். இது சம்பந்தமாக இம்ரான் கான் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற சீக்கியர்களுக்கு எதிரான சம்பவங்கள் பாகிஸ்தானில் அதிகரித்துள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடைசியாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, கும்பலைக் கட்டுப்படுத்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். 

.