மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் இன்று வெளியிடப்பட்ட உயர் கல்வி நிறுவனப் பட்டியல்களில் முதல் இடத்தில் ஐஐடி மெட்ராஸ் பெற்றுள்ளது.
இந்திய அறிவியல் கழகம் பெங்களூரு இரண்டாம் இடத்திலும் ஐஐடி டெல்லி மூன்றாவது இடத்திலும் உள்ளது. நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களின் தரவரிசை தேசிய நிறுவன நிர்ணயக் கட்டமைப்பு கல்வி அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளின் அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்டமைப்பின் அடிப்படையில் முதல் பட்டியல் 2016ல் வெளியிடப்பட்டது.
ஏழு ஐஐடிகள் இந்த ஆண்டு உயர் கல்வி நிறுவனங்கள் கல்வி அமைச்சகத்தின் தேசிய தரவரிசை பட்டியலில் உள்ளன. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஏழாவது இடத்தில் உள்ளது.
ஆல் இந்திய இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தேசிய சட்டப் பள்ளி பெங்களூரு சட்டக் கல்லூரியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
தேசிய கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலிலி டெல்லி பல்கலைக் கழக் மிராண்டா ஹவுச் முதலிடத்தில் உள்ளது. செயின் ஸ்டீபன் நான்காவது இடத்தில் உள்ளது.