This Article is From Sep 12, 2019

Chandrayaan 2 உடனான தொடர்பை ஏற்படுத்த நாசாவின் வாவ் திட்டம்!

சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

Chandrayaan 2 உடனான தொடர்பை ஏற்படுத்த நாசாவின் வாவ் திட்டம்!

விக்ரம் லேண்டர் விண்கலம், சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, நிலவை நோக்கி பயணித்தது லேண்டர்.

Chennai:

சந்திராயன் 2-வின் விக்ரம் லேண்டருடன் தொடர்பை எற்படுத்திக் கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தொடர்ந்து முயன்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், சந்திராயனுக்கு ரேடியா சிக்னல் அனுப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா-வின் ஜெட் புரொபல்ஷன் லேப் மூலம்தான் விக்ரம் லேண்டருக்கு சிக்னல் அனுப்பப்பட்டு வருகிறதாம்.

இது குறித்து ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்துக்கு, பெயர் சொல்ல விரும்பாத இஸ்ரோ அதிகாரி ஒருவர், “விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறோம். வரும் செப்டம்பர் 20-21 ஆம் தேதி வரை நிலவின் அந்தப் பகுதியில் சூரிய வெளிச்சம் இருக்கும். இதுவரை தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயல்வோம்” என்று கூறியுள்ளார். 

சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட அதேநாளில் புவிவட்டப்பாதையிலும் விண்கலம், நிலைநிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு நிலையாக அதிகரிக்கப்பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, நிலவை நோக்கி பயணித்தது லேண்டர்.

எனினும், சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தத்துடன் அறிவித்தார். என்ன காரணத்தால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

இதனிடையே, தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை கண்டறிந்ததாகவும் இஸ்ரோ தெரிவித்தது. தொடர்ந்து, விடுபட்ட தகவல் தொடர்பை மீட்கும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் தெரிவித்திருந்தது



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.