This Article is From Jun 27, 2020

நாசா வெளியிட்ட சூரியனின் 10 ஆண்டுக்கால வரலாற்றைக் கண்டு ரசியுங்கள்!!

11 ஆண்டு சூரிய சுழற்சியின் வெப்ப உமிழ்வினையும் வெப்பம் குறைவதையும் SDO படமெடுத்துள்ளது. இதன் மூலமாக புவிக்கு அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனின் செயல்பாடுகளை நம்மால் உணருவதன் மூலம், இதர நட்சத்திரங்களின் செயல்பாடுகளை கணிக்கவும் நமக்கு இந்த வீடியோ தொகுப்பு உதவுகிறது.

நாசா வெளியிட்ட சூரியனின் 10 ஆண்டுக்கால வரலாற்றைக் கண்டு ரசியுங்கள்!!

ஒவ்வொரு 11 வருடங்களுக்கும் சூரியனின் காந்த புலம் திசை மாறுகிறது.

பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருவெடிப்பு நிகழ்வினால்தான் இந்த பிரபஞ்சமும், அதன் ஒரு பகுதியாக நமது சூரிய குடும்பமும் உருவாகியுள்ளது. இந்நிலையில், நாசாவானது சூரியனின் வியக்கத்தக்க 10 ஆண்டு கால படங்களை வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பானது 10 ஆண்டு கால சூரியனின் படங்களை ஒரு மணி நேரத்தில் சுருக்கி வெளிவந்துள்ளது. நாசாவின் சோலார் டைனமிக்ஸ் ஆய்வகம் (SDO) பத்தாண்டுகளுக்கும் மேலாக படமெடுத்திருக்கின்றது. SDO பூமியைச் சுற்றி வரும் போது, சூரியனின் 425 மில்லியன் உயர் தெளிவுத்திறன் படங்களை சேகரித்துள்ளது. 

முழு வீடியோவும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது

11 ஆண்டு சூரிய சுழற்சியின் வெப்ப உமிழ்வினையும் வெப்பம் குறைவதையும் SDO படமெடுத்துள்ளது. இதன் மூலமாக புவிக்கு அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனின் செயல்பாடுகளை நம்மால் உணருவதன் மூலம், இதர நட்சத்திரங்களின் செயல்பாடுகளை கணிக்கவும் நமக்கு இந்த வீடியோ தொகுப்பு உதவுகிறது. ஒவ்வொரு 11 வருடங்களுக்கும் சூரியனின் காந்த புலம் திசை மாறுகிறது. "ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு புகைப்படத்தைத் தொகுத்து, இந்த திரைப்படம் சூரியனின் ஒரு தசாப்தத்தை 61 நிமிடங்களாக ஒடுக்குகிறது" என நாசா இந்த வீடியோவை பகிரும்போது குறிப்பிட்டுள்ளது. 

இந்த வீடியோ வெளியிடப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதனை பார்த்துள்ளனர்.

"இது முற்றிலும் நம்பமுடியாதது" என்று கருத்துகள் பிரிவில் ஒருவர் எழுதியுள்ளார்.

கிட்டத்தட்ட உண்மையற்றதாக தோன்றுகிறது" என்று மற்றொருவர் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

வெளிப்புற வளிமண்டலத்தைக் கைப்பற்ற 17.1 நானோமீட்டர்களின் தீவிர புற ஊதா அலைநீளத்தினை படமெடுத்துள்ளதாக நாசா கூறியுள்ளது.

Click for more trending news


.