This Article is From Nov 21, 2019

ரத்தன் டாடாவிடம் தன் கனவு வேலையை பெற்ற 27 வயது இளைஞர்

"My dad asked me to write a letter to Mr Ratan Tata, since he loves dogs too," says Shantanu Naidu.

ரத்தன் டாடாவிடம்  தன் கனவு வேலையை பெற்ற 27 வயது இளைஞர்

ரத்தன் டாடா சாந்தனுவுடன்

தொழிலதிபர் ரத்தன் டாடா பிரபலத்தன்மைக்காக அல்லாமல் மக்களுக்கு உதவும் நோக்கில் பல உதவிகள் செய்யக்கூடியவர். அந்த குணத்தை வெளிப்படுத்தியுள்ளார் 27 வயதான சாந்தனு நாயுடு.

ரத்தன டாடாவை 2014 ஆம் ஆண்டில் முதல்முறையாக சந்தித்தாகவும் தனது வாழ்க்கையை மாற்றிய சந்திப்பை குறித்து சாந்தனு விளக்குகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  நாயின் மரணத்தைக் கண்டதாகவும், நாய்கள் வாகனங்களில் அடிபடாமல் இருக்க அதன் காலர்களில் பிரதிபலிக்கும் தன்மை கொண்ட பொருளினை பொருத்த வேண்டும் என்று நினைத்தார். அப்போதுதான் ஓட்டுநகள் நாய்களை தூரத்திலிருந்து அடையாளம் காண முடியும்.

“இந்த வார்த்தைகள் தீ போல பரவியது எங்களின் பணிகள் குறித்து டாடா குழும நிறுவனங்களின் செய்திகளிலும் வெளியானது. அந்த நேரத்தில் என் தந்தை ரத்தன் டாடாவுக்கு கடிதம் எழுதச் சொன்னார். ஏனெனில் அவர் நாய்களை நேசிக்கக் கூடியவர். நான் முதலில் தயங்கினேன், பின் ‘என் எழுதக்கூடாது' என்று எண்ணி எழுதினேன். 

கடிதம் எழுதி இரண்டு மாதங்களுக்கு பிறகு டாடாவிடமிருந்து பதில் வந்தது. அவர் ஒரு கூட்டத்திற்கு என்னை அழைத்தார். என்னால் அதை நம்ப முடியவில்லை என்று சாந்தனு தெரிவிக்கிறார். 

சில நாட்களுக்குப் பிறகு சாந்தனு ரத்தன் டாடாவை மும்பையில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது டாடா சாந்தனு செய்யும் வேலையை மிகவும் நேசிப்பதாகவும் அதை நினைக்கும்போது மயிர்கூச்செரிவதாகவும் கூறியுள்ளார். பின் டாடா தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று சாந்தனு செய்யும் பணிக்காக நிதியளித்துள்ளார். 

அதன்பிறகு, தனது உயர் பட்டப் படிப்பை  முடித்து விட்டு சந்திப்பதாக  சாந்தனு தெரிவித்துள்ளார். அதன் பின்பு டாடா டிரஸ்டில் பணியாற்றுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக டாடாவுக்கு உறுதியளித்தார். 

மீண்டும் இந்தியாவுக்கு வந்தவுடன் அவர் எனக்கு அழைப்பு கொடுத்தார். எனது அலுவலகத்தில் எனக்கு நிறைய வேலைகள் செய்யப்படாமல் உள்ளன. நீங்கள் எனது உதவியாளாராக இருப்பீர்களா? என்று கேட்டார்.  எனக்கு எப்படி நடந்து கொள்வது என்பது கூடத் தெரியவில்லை. சில நொடிகள் கழித்து ‘சரியென என் சம்மதத்தை தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். 

Click for more trending news


.