This Article is From Mar 28, 2020

கொரோனா ஒழிப்புக்காக ரூ. 500 கோடியை வழங்கியது டாடா நிறுவனம்!!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 918-ஆக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் மட்டும் 194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

கொரோனா ஒழிப்புக்காக ரூ. 500 கோடியை வழங்கியது டாடா நிறுவனம்!!

கொரோனா தடுப்புக்காக பல்வேறு பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்
  • பிரதமர், முதல்வர் நிவாரண நிதிகளுக்கு பணம் அனுப்பப்படுகிறது
  • டாடா அறக்கட்டளை ரூ.500 கோடியை கொரோனா ஒழிப்புக்கு ஒதுக்கியுள்ளது
New Delhi:

கொரோனா ஒழிப்பு பணிகளுக்காக டாடா நிறுவனத்தின் டாடா அறக்கட்டளை ரூ. 500 கோடியை வழங்கியுள்ளது. மனித சமூகம் எதிர்கொள்ளும் மிகவும் கடுமையான சவால் என்று கொரோனாவை டாடா அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா சமூக பரவல் என்ற அபாய கட்டத்தை எட்டி விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே, கொரோனா ஒழிப்பு பணிகளுக்காக பிரதமருக்கும், மாநில அளவில் முதல்வர் நிவாரண நிதிக்கும் பிரபலங்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். 

இந்த நிலையில், டாடா நிறுவனத்தின் டாடா அறக்கட்டளை ரூ. 500 கோடியை கொரோனா ஒழிப்பு பணிகளுக்காக ஒதுக்கியுள்ள. இந்த தொகை, மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், சுவாச கருவிகள், பரிசோதனை செய்யும் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று டாடா அறக்கட்டளை கூறியுள்ளது. 
 

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 918-ஆக உயர்ந்திருக்கிறது. 

ஒரே நாளில் மட்டும் 194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

.