This Article is From Jul 29, 2018

பாகிஸ்தான் தேர்தல்: அண்டை நாடுகளுடன் அமைதி காக்க பாகிஸ்தானுக்கு இந்தியா வாழ்த்து

கூட்டனி குறித்த பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்று வருவதால், பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பது யார் என்று சிக்கல் நிலவி வருகிறது

பாகிஸ்தான் தேர்தல்: அண்டை நாடுகளுடன் அமைதி காக்க பாகிஸ்தானுக்கு இந்தியா வாழ்த்து

ஹைலைட்ஸ்

  • இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி 116 இடங்களை பெற்றுள்ளது
  • எனினும், இம்ரான் கான் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை
  • கூட்டனி குறித்த பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்று வருகிறது
New Delhi:

புதுடில்லி: பாகிஸ்தான் தேர்தலில், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி அதிக இடங்கள் கைப்பற்றி முன்னலையில் உள்ளது.

பாகிஸ்தானில் மொத்தம் 272 தொகுதிகள் உள்ளன. தேர்தல் முடிவில், இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி 116 இடங்களை பெற்றுள்ளது. எனினும், இம்ரான் கான் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், பாகிஸ்தான் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் பேட்டியளித்த இம்ரான் கான், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு முறையை சீர் செய்ய முயற்சி செய்ய இருப்பதாக கூறினார். 22 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, பாகிஸ்தான் நாட்டின் வளர்ச்சி முன்னேற்றங்களுக்காக இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றார்.

கூட்டனி குறித்த பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்று வருவதால், பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பது யார் என்ற சிக்கல் நிலவி வருகிறது

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “வளமான முற்போக்கு நாடாக வளர்ச்சி கண்ட பாகிஸ்தான், தன்னுடைய அண்டை நாடுகளுடன் அமைதி காக்க இந்தியா வாழ்த்துகிறது” என்று தெரிவித்திருந்தது

இந்திய இராணுவ அமைப்பினர் மீது, பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் எல்லை பிரச்சனை தீவிரமடைந்து வருகிறது.
 

.