This Article is From Jul 06, 2018

8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக கட்சிக் கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி மறுப்பு

இத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து பல மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக கட்சிக் கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி மறுப்பு

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தங்கள் கட்சி சார்பில், சேலத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரமுகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, கூட்டம் நடத்த அனுமதி மறுத்தார். அரசின் திட்டங்கள் பற்றி முழுமையாக தெரியாமல், இது போன்ற எதிர்ப்பு கூட்டங்களை நடத்தக் கூடாது என்று நீதிபதி தெரிவித்தார்.

தமிழக அரசு முதல் முறையாக ஒரு 8 வழி சாலை அமைக்க திட்டம் வகுத்திருக்கிறது. இந்த சாலை சென்னை - சேலம் இடையே உள்ள பல கிராமங்களையும், சிறு நகரங்களையும் இணைக்க உதவும். பயண நேரத்தையும் குறைக்க உதவுகிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

“ என்னுடைய பார்வையில், இந்த திட்டம், பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட, பல தொழிற்சாலைகள் அமைய வழிவகை செய்யும். இதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்” என்றார் அவர்.

முன்னதாக, தமிழ் மாநில காங்கிரஸின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சுசீந்திரன், போராட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்டதாகவும், ஆனால் காவல் துறை அனுமதி மறுத்ததாகவும் கூறினார். கூட்டம் அமைதியா நடத்தப்படும் என்று உறுதி கொடுத்த போதும், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்க இருந்த அந்த கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை என்பதால், தான் நீதிமன்றத்தை நாடியதாக சுசூந்திரன் கூறினார்.

இத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து பல மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.