ஜம்மு காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு! சாலையில் தேங்கி நின்ற 2 ஆயிரம் வாகனங்கள்!!

போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்றால் விதிமுறைகளை கவனத்துடன் கையாள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு! சாலையில் தேங்கி நின்ற 2 ஆயிரம் வாகனங்கள்!!

போக்குவரத்தை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Jammu:

ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் இன்று மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு எற்பட்டது. இதன் விளைவாக சுமார் 2 ஆயிரம் வாகனங்கள் சாலையில் தேங்கி நின்றன. 

போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்றால் விதிமுறைகளை கவனத்துடன் கையாள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் ஜம்மு  - ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை மூடுப்பட்டுள்ளது. அவ்வப்போது மலையில் இருந்து பாறைகள் சரிந்து விழுவதால் தேசிய நெடுஞ்சாலை பணிகள் பாதிப்பு அடைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

டிக்டோல் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சாலையின் சில பகுதிகள் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. 

தேசிய நெடுஞ்சாலையில் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக பயணிகள் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, போக்குவரத்து பாதிப்பு குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

பனி மூட்டம் காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெற்கு காஷ்மீரின் ரஜவ்ரியையும், ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தையும் இணைக்கும் முகல் சாலை 2 வாரங்களாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.