This Article is From Sep 01, 2020

10 ரூபாய்க்கு 'மோடி இட்லி'.. சேலத்தில் பாஜக பிரமுகரின் கலக்கல் போஸ்டர்

மோடியின் பெயரில் 10 ரூபாய்க்கு 4 இட்லி என்ற போஸ்டரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

10 ரூபாய்க்கு 'மோடி இட்லி'.. சேலத்தில் பாஜக பிரமுகரின் கலக்கல் போஸ்டர்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மோடி இட்லி போஸ்டர்

Coimbatore:

சேலத்தில் 10 ரூபாய்க்கு மோடி இட்லி வழங்கப்படும் என்று போஸ்டர்கள் ஒட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சேலம் சேலம் டவுன்,  பழைய பேருந்து நிலையம் , சின்ன கடை வீதி, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மோடி இட்லி என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அதில், பாஜக பிரமுகர் மஹேஸ் என்பவர் வெறும் 10 ரூபாய்க்கு 4 இட்லிகள் வழங்கப்படும் என்று வாசகம் பொறித்துள்ளார். மேலும், அதிநவீன் கருவிகள், சுகாதாரமானது, ஆரோக்கயமானது, சுவையானது-தரமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் என்பது முதல்வர் பழனசாமியின் சொந்த மாவட்டமாகும். அங்கு பாஜகவினர் சுமார் 22 கடைகள் திறந்து, மோடி இட்லி என்ற பெயரில் விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. 

மோடியின் பெயரில் 10 ரூபாய்க்கு 4 இட்லி என்ற போஸ்டரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.