This Article is From May 22, 2020

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பொறுப்பேற்பு

கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிரிவு, நிர்வாகக்குழுவின் தலைவராக இந்தியா இருக்க வேண்டும் என்று ஏக மனதாக முடிவு செய்திருந்தது. இதற்கு கடந்த செவ்வாயன்று 194 நாடுகளைக் கொண்ட உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்தது. 

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பொறுப்பேற்பு

மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

New Delhi:

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழு தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தீவிரப்படுத்தி வரும் நிலையில் அவருக்கு இந்த கவுரவம் மிக்க பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பொறுப்பில் ஜப்பானை சேர்ந்த மருத்துவர் ஹிரோகி நகடானி இருந்தார். 

புதிய பொறுப்பு குறித்து ஹர்ஷவர்தன் அளித்த பேட்டியில், 'உலகம் கொரோனா வைரஸால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கிய பொறுப்பை நான் உணர்ந்துள்ளேன். அடுத்த 20 ஆண்டுகளுக்கு சுகாதாரம் தொடர்பான  சவால்கள் இருக்கும். அதனை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்' என்று கூறியுள்ளார். 

உலக சுகாதார அமைப்புக்கு ஆலோசனைகள் வழங்குதல், அமைப்பின் முடிவுகளை வலுப்படுத்துதல் மற்றும் அதை நிறைவேற்ற உதவியாக இருத்தல் உள்ளிட்டவை நிர்வாகக்குழுவின் முக்கிய பணிகளாகும். 

கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிரிவு, நிர்வாகக்குழுவின் தலைவராக இந்தியா இருக்க வேண்டும் என்று ஏக மனதாக முடிவு செய்திருந்தது. இதற்கு கடந்த செவ்வாயன்று 194 நாடுகளைக் கொண்ட உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்தது. 

பிராந்திய அளவில் ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாகக்குழு தலைவர் பொறுப்பு மாற்றப்படும். முதல் ஆண்டிற்கு தலைவராக இந்தியா செயல்படும். 

நிர்வாகக்குழு தலைவர் பொறுப்பு என்பது முழு நேர வேலையாக இருக்காது. கமிட்டி கூடும்போது அதற்கு தலைமை வகிப்பது முக்கிய பணியாக அமையும்.

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழுவில் பல்துறை நிபுணர்கள் 34 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆண்டுக்கு இருமுறை நிர்வாகக்குழு கூடும். பெரும்பாலும் ஜனவரி மற்றும் மே மாதங்களில் கூட்டங்கள் நடத்தப்படும். 

.