ஹரியானா மாநில உணவகத்தில் கணவரைத் தாக்கி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேர்

Gurgaon restaurant attack: இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை சுற்றி ஆறுபேர் நின்று வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து அப்பெண்ணின் கணவரையும் தாக்குகிறார்கள்.

ஹரியானா மாநில உணவகத்தில் கணவரைத் தாக்கி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேர்

Gurgaon restaurant attack: கணவரை மது பாட்டிலால் தாக்கியுள்ளனர்

Gurgaon:

ஹரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியில் உள்ள உணவகத்திற்கு குடும்பத்தினருடன் சென்றபோது ஆறுபேர் கொண்ட குழு வன்முறையில் ஈடுபட்டது. 

ஆறு பேர் கொண்ட குழு மது அருந்தியிருந்தனர். கணவருடன் வந்திருந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். கேள்வி கேட்ட கணவரை மது பாட்டிலால் தாக்கியதாகவும் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.  இந்த சம்பவம் ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்தது. 

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை சுற்றி ஆறுபேர் நின்று வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து அப்பெண்ணின் கணவரையும் தாக்குகிறார்கள்.

Newsbeep

குற்றவாளிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.