This Article is From Jun 04, 2019

தீவிரவாதத்திற்கு எதிராக அரசு பூரண சகிப்புத்தன்மையில்லா கொள்கையுடன் செயல்படும் - அமித் ஷா

பாதுகாப்பு அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. மாறாக சமூக காரணங்களையும் ஆராய்ந்து அதிலும் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் பலரும் மீண்டும் தீவிரவாதத்துடன் இணைந்திடக் கூடாது.

தீவிரவாதத்திற்கு எதிராக அரசு பூரண சகிப்புத்தன்மையில்லா கொள்கையுடன் செயல்படும் - அமித் ஷா

இந்த ஆண்டு முதல் 5 மாதங்களில் 101 பயங்கரவாதிகள் ஜம்மு & காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளால் அகற்றப்பட்டனர்.

ஹைலைட்ஸ்

  • The policy brought the BJP back in power with a thumping majority
  • The home ministry says the policy is yielding results
  • In next 5 years, more focus is likely to be given to de-radicalisation

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு  தீவிரவாதத்திற்கு எதிராக பூரண சகிப்புத்தன்மையில்லா கொள்கையைத் தொடரும் எனத் தெரிகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேசிய தேர்தலில் பாஜக மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியது. திங்களன்று புதிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புப் படைகளுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினார். எந்தவொரு விமர்சனத்திற்கும் அஞ்சாமல் பூரண சகிப்புத்தன்மையில்லா கொள்கையை தொடர வேண்டும் என்று கூறியுள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு முதல் 5 மாதங்களில் 101 பயங்கரவாதிகள் ஜம்மு & காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளால் அகற்றப்பட்டனர். சராசரியாக ஒவ்வொரு மாதமும் 20 பயங்கரவாதிகள் அகற்றப்படுகிறார்கள்.

இந்த வெற்றிகள் இருந்த போதிலும் பயங்கரவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்று அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். “50 இளைஞர்கள் பல்வேறு பயங்கரவாத தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்துள்ளனர். அது ஒரு கவலைக்குறிய விஷயம் என்று மூத்த அதிகாரி NDTVயிடம் கூறியுள்ளார்.

e1af64e8

அடுத்த ஐந்தாண்டுகளில் தீவீரவாதத்தை அடக்க தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பாதுகாப்பு அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. மாறாக சமூக காரணங்களையும் ஆராய்ந்து அதிலும் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் பலரும் மீண்டும் தீவிரவாதத்துடன் இணைந்திடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

 திங்கள்கிழமை உள்துறை அமைச்சகத்தின் சந்திப்பில் அமித் ஷா காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெறும் ரம்ஜான் விழாபற்றி விளக்கினார். ஒருமணிநேரம் நடந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டெவல், உளவுத்துறை இயக்குநர் ராஜீவ் ஜெயின் மற்றும் உள்துறை செயலாலர் ராஜீவ் க்யூபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

.