This Article is From Mar 12, 2019

வேர்ல்டு வைடு வெப்பின் 30வது பிறந்தநாளுக்கு டூடுல் வெளியிட்டது கூகுள்!

World Wide Web Anniversary: வேர்ல்டு வைடு வெப் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாக கூகுள் இன்று டூடுல் வெளியிட்டுள்ளது.

வேர்ல்டு வைடு வெப்பின் 30வது பிறந்தநாளுக்கு டூடுல் வெளியிட்டது கூகுள்!

World Wide Web: கூகுள் டூடுலில் பழைய மானிட்டரிலிருந்து ஹை ஸ்பீட் காலம் வரையிலான அனைத்து காலக்கோடாக கூகுளை வடிமைத்துள்ளனர்

New Delhi:

வேர்ல்டு வைடு வெப் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாக கூகுள் இன்று டூடுல் வெளியிட்டுள்ளது. 1989ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி செர்ன் ஆய்வகத்தில் இங்கிலாந்தை சேர்ந்த இயற்பியல் ஆய்வாளர் டிம் பெர்னர்ஸின் ஆய்வில் வேர்ல்டு வைடு வெப் உருவாக்கப்பட்டது. இதனை தற்போது பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

அவரது கண்டுபிடிப்பில் ஹைப்பர் டெக்ஸ்ட் மூலம் ஒரு இணைப்பிலிருந்து மற்றோரு இணைப்புக்கு செல்ல முடியும்.

கூகுள் டூடுலில் பழைய மானிட்டரிலிருந்து தற்போது உள்ள ஹை ஸ்பீட் காலம் வரையிலான அனைத்து காலக்கோடாக கூகுளை வடிமைத்துள்ளனர்.

1960லிருந்து உள்ள இண்டெர்நெட் அல்ல இது. அதுவேறு இது வேறு என்ற கருத்துகள் எல்லா நேரங்களிலும் விளக்கப்பட்டு வருகிறது. வேர்ல்டு வைடு வெப் ஒரு ஆன்லைன் அப்ளிகேஷன். 

திங்களன்று பெர்னர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேர்ல்டு வைடு வெப் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது ஆனால் அதில் சில சைபர் குற்றம் புரிபவர்களால் ஆபத்தும் நிறைந்தது என்றார்.

.