அனுமதி வாங்காமல் பேரணி நடத்தியதால் கம்பீர் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

Lok Sabha Elections 2019: கிழக்கு டெல்லி உட்பட டெல்லியில் இருக்கும் 7 தொகுதிகளுக்கு வரும் மே 12 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது

அனுமதி வாங்காமல் பேரணி நடத்தியதால் கம்பீர் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

New Delhi:

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் பாஜக-வில் இணைந்தார். அவர் பாஜக சார்பில் டெல்லியிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

கம்பீர், கிழக்கு டெல்லியில் உள்ள ஜங்பூராவில் கடந்த 25 ஆம் தேதி அனுமதி வாங்காமல் பேரணி நடத்தியதாக கூறப்படுகிறது. இதையொட்டி அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள தேர்தல் அதிகாரி கம்பீர் மீது நடவடிக்கை எடுப்பார் என்று தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாக அவர் பாஜக-வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், கடந்த மாதம் அவர் அதிகாரபூர்வமாக பாஜக-வில் இணைந்தார். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அவர் பாஜக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவர் கிழக்கு டெல்லி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

Newsbeep

கிழக்கு டெல்லி உட்பட டெல்லியில் இருக்கும் 7 தொகுதிகளுக்கு வரும் மே 12 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.