This Article is From Feb 28, 2019

‘மேலும் ராணுவ நடவடிக்கை பிரச்னையை பெரிதாக்கும்!’- அமெரிக்கா கருத்து

மேலும் பதற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது இரு நாடுகளின் பொறுப்பாகும், அமெரிக்கா தரப்பு

‘மேலும் ராணுவ நடவடிக்கை பிரச்னையை பெரிதாக்கும்!’- அமெரிக்கா கருத்து

இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களில் இரு தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தியது.

Washington:

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் அமெரிக்க அரசு தரப்பு, ‘இரு நாட்டுக்கும் இடையில் மேலும் எதாவது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது நிலைமை இன்னும் மோசமாக்கும்' என்றுள்ளது. 

இது குறித்து அமெரிக்க அரசு தரப்பு கூறுகையில், ‘கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த தீவிரவாத தக்குதல் என்பது இந்திய துணைக் கண்டத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, நாங்கள் பாகிஸ்தான் அரசை, அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிரவாதத்தை ஒடுக்குமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளது. 

இப்படிப்பட்ட சூழலில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையையே இந்தியாவும் அவரிடம் வலியுறுத்தியுள்ளது. 

நேற்று இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, ‘இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவுவதனால், எல்லையில் இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். 

மேலும் பதற்றம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது இரு நாடுகளின் பொறுப்பாகும். நான் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியுடன் தொடர்பில்தான் இருக்கிறேன். அவரிடம் பாகிஸ்தான் தரப்பு செய்ய வேண்டியது குறித்தும், தீவிரவாத குழுக்களுக்கு எதிராக அர்த்தபூர்வமான நடவடிக்கை வேண்டும் என்பதையும் கூறியுள்ளேன்' என்றார்.

புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களில் இரு தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தியது.

செவ்வாய் கிழமை அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 12 மிராஜ் 2000 என்ற ஜெட் போர் விமானம் 1,000 கிலோ எடை கொண்டு வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியுள்ளது.

சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க - ‘பிரச்னையை பேசித் தீர்ப்போம்!' - இந்தியாவுக்கு இம்ரான் கான் அழைப்பு

.