‘பிரச்னையை பேசித் தீர்ப்போம்!’- இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கும் இம்ரான் கான்

நாம் இருவரும் உட்கார்ந்து இந்தப் பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வோம், இம்ரான் கான்

‘பிரச்னையை பேசித் தீர்ப்போம்!’- இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கும் இம்ரான் கான்

இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது

Islamabad:

இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

அவர் கூறுகையில், ‘தற்போது நிலவி வரும் பிரச்னை குறித்து நாம் உட்கார்ந்து பேசலாம். 

உங்களிடம் இருக்கும் ஆயுதங்களையும், எங்களிடம் இருக்கும் ஆயுதங்களையும் வைத்து தவறான கணக்கு போடவே முடியாது. இந்த சூழல் உச்சகட்டத்தை எட்டினால், அது என் கையிலோ அல்லது மோடியின் கையிலோ இருக்காது. 

புல்வாமா தாக்குதலில் உங்களுக்கு ஏற்பட்ட வலியை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அது குறித்து பேசவும், விசாரணை செய்யவும் நாங்கள் தயார். 

நாம் இருவரும் உட்கார்ந்து இந்தப் பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வோம்' என்று பேசியுள்ளார்.  

பாகிஸ்தானுடன் எப்படிப்பட்ட சூழல் நிலவி வருகிறது என்பதை விளக்க இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ‘ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை இந்திய விமானப்படை தாக்கி, அழித்த பிறகு, பாகிஸ்தான் தரப்பு எல்லைக் கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று பாகிஸ்தான் தரப்பு வான் வழி தாக்குதலில் ஈடுபட்டது.

இந்திய விமானப்படை அதற்கு பதிலடி கொடுத்தது. இந்த சண்டையில் ஒரு பாகிஸ்தானிய விமானப்படை விமானம் சுட்டுக் வீழ்த்தப்பட்டது. 

இந்த சம்பவத்தில் இந்திய விமானப்படையின் மிக் 21 போர் ரக விமானம் காணவில்லை. பாகிஸ்தான் தரப்பு, விமானி, அவர்கள் பிடியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. அது குறித்து நாங்கள் விசாரணை செய்து வருகிறோம்' என்றார்.

 

மேலும் படிக்க  : பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்ததுபோன்று இந்தியாவும் நுழைய தயார்: அருண் ஜெட்லி அதிரடி

 

More News