This Article is From Dec 27, 2018

இந்தியா பிரபலங்களை பற்றி உலக பிரபலங்களின் டாப் 5 ட்வீட்கள்

அரசியல்வாதிகள், நடிகர்கள் என பலர் இதில் அடங்குவர்.

இந்தியா பிரபலங்களை பற்றி உலக பிரபலங்களின் டாப் 5 ட்வீட்கள்

இதில் எது உங்களுக்கு பிடித்தது ?

2018 ஆம் ஆண்டு உலகமயம் ஆக்குதலில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்திய திரைபட பாடலுக்கு உலக பிரபலம் லைக் போடுவதும் சரி, இந்தி பாடலுக்கு உலக தலைவர்கள் நடனபாடுவதும் சரி அனைத்தும் வைரல் ஹிட்.

1.ஜான் செனா – ஷாருக் கான் :

WWE மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜான் செனா.  WWE யின் முகமே செனா தான். உலக அரங்கில் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் ஷாருக் கான். இந்தநிலையில், கடந்த ஜூலை மாதம், ஷாருக் கான் கூறிய வாக்கியத்தை தன் ட்வீட்டரில் ட்வீட் செய்திருந்தார் ஜான் செனா. இதற்கு மறு ட்வீட் செய்து நன்றி தெவித்திருந்தார் கிங் ஷாருக் கான்.

 

2.   டிரேக் – ஆதியா செட்டி :

பிரபல இந்தி நடிகர் சுனில் செட்டி. இவரது மகள் ஆதியா செட்டி. இவரும் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஆங்கில பாடல் உலகில் பிரபலமானவர் டிரேக். கடந்த ஆகஸ்ட் மாதம் சுனில் செட்டியின் பிறந்தநாளைக்கு, ஆதியா செட்டி தானும் தன் தந்தையான சுனில் செட்டியும் இருக்கும் புகைபடம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதற்கு சுனில் செட்டி ஓர் லெஜண்ட் என டிரேக் கமண்ட் பண்ணிருந்தார்.

    

3.நிக் – பிரியங்கா திருமணம் :

உலகம் முழுவதும் பிரபலமானது நிக் – பிரியங்கா திருமண நிகழ்வு. ஆங்கில பாடகர் நிக் ஜோனஸ், இந்தி மற்றும் ஆங்கில பட நடிகை பிரியங்காவை காதல் திருமணம் செய்து கொண்டனர். ஜோத்பூரில் டிசம்பர் 1,2018 இல் அவர்களது திருமணம் நடைபெற்றது. பாலிவுட் – ஹாலிவுட் இணையும் திருமண நிகழ்வாக இது பார்க்கபட்டது.

 

4.ஹிலாரி கிளிண்டன் – இந்தி பாடல் :

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன். கடந்த அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்க்கு எதிராக போட்டியிட்டார் ஹிலாரி. அம்பானி வீட்டு திருமணம் டிசம்பர் மாதம் நடந்தது. இஷா அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்வில் அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என பலர் கலந்து கொண்டனர். அந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட ஹிலாரி மற்றும் அமெரிக்க அரசியல்வாதி ஜான் கெரி இருவரும் 'துனே மேரே' என்னும் ஹிந்தி பாடலுக்கு ஷாருக்கானுடன் சேர்ந்து நடனமாடினர்.

 

5.எலான் மஸ்க் – பாலிவுட் :

டெக்னாலஜியின் ஜாம்பவன் என்று எலாம் மஸ்கை கூறலாம். டெஸ்லா, ஸ்பேஸ் X என பல நிறுவனங்களை துவங்கியவர் எலான் மஸ்க். அவர், இந்த மாதம், 2015 இல் ரன்வீர் சிங் – தீபிகா நடித்த பஜிராவ் மஸ்தானி படத்தில் இருந்து ஓர் பாடலை தன் ட்வீட்டரில் இரு ஹார்ட் போட்டு பகிர்ந்தது வைரல் ஹிட் ஆனது.  

 

Click for more trending news


.