ஷில்பா ஷெட்டியின் மகனுக்கு ரஸ்லிங் சூப்பர் ஸ்டார் ஜான் செனா அனுப்பிய செய்தி : வீடியோ

இனி என் காலம் முடிந்து போயிடுச்சி இனி உன்னுடைய காலம் நீ ஜொலிக்கப்போகும் காலம் வியான் என்று கூறியிருந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஷில்பா ஷெட்டியின் மகனுக்கு ரஸ்லிங் சூப்பர் ஸ்டார் ஜான் செனா அனுப்பிய செய்தி : வீடியோ

வீடியோவில் ஜான் செனா (Image courtesy: wweindia)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. வியான் ராஜ் குந்த்ரா சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்திருந்தார்.
  2. அதில் ஜான் செனா மீதான தன் அன்பை தெரிவித்திருந்தார்
  3. ஜான் செனா வியானுக்காக பிரத்யேகமாக வீடியோ ஒன்றில் பேசி அனுப்பியுள்ளார்

ஷில்பா ஷெட்டியின் மகனான வியான் ராஜ் குந்த்ராவை சமீபத்தில் டபுள்யூடபுள்யூஇ இந்தியா ஹோஸ்ட்(World Wrestling Entertainment) சார்பாக பேட்டி எடுக்கப்பட்டது. அதில் 6 வயது சிறுவனான வியான் தனக்குபிடித்த ரஸ்லர் சூப்பர் ஸ்டார்களை பற்றி பேசியிருந்தார். அதிலும் குறிப்பாக தனக்கு பிடித்த ரஸ்லர் என ஜான் செனாவைப் பற்றி கூறியிருந்தார். 

இந்த இண்டர்வியூ ஸ்பெஷல் இல்லங்க… ஜான் செனாவே வியான்க்காக பிரத்யேகமாக வீடியோ ஒன்றினை பேசி அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் வியான்க்காக சில வரிகள் பாடுகிறார். 

நேர்காணலில் ஜான் செனாவை எந்தளவுக்கு பிடிக்கும் என்று கேள்வி கேட்டதற்கு 10 மதிப்பெண்ணில் என்ன கொடுப்பாய் என்று கேட்டதற்கு 10க்கு 10 கொடுப்பேன் என்று கூறியுள்ளார். ஜான் செனா பேசிய வீடியோவில் ஹாய் வியான், நான் உன்னுடைய  ஜான் செனா பேசுகிறேன். 

நான் உன்னுடைய  ஜான் செனா பேசுகிறேன். உன்னோட வீடியோ பார்த்தேன். உன்னுடைய உடற்கட்டையும் பார்த்தேன் இனி என் காலம் முடிந்து போயிடுச்சி இனி உன்னுடைய காலம் நீ ஜொலிக்கப்போகும் காலம் வியான் என்று கூறியிருந்தார். 

நடிகை ஷில்பா ஷெட்டி தன் மகனின் நேர்காணலையும்  ஜான் செனாவின் பதிலையும்  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................